பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& & அநுத்தமா y; அண்ணல் காட்டிய வழி ைெவத்தியர் சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் தொழில் அது. அவர் எழுதித் தந்திருக்கும் ஊசி மருந்தை இன் னும் இரண்டு மணி நேரத்திற்குள் கொடுக்காவிட்டால் என் மகன் சங்கரன் பிழைப்பதே அரிதாம். பணத்திற்கு எங்கே போவது ? வண்ணுனுக்குப் போடாத சட்டையும் தைத்த வேஷ்டி யுமாக நான் கடன் கேட்கப் போனல் யார்தான் தர முன் வரு வார்கள் ? யாரைத்தான் போய்க் கேட்பது? மழை வேறு துாறிக் கொண்டே இருக்கிறது. ஆயிற்று, மழை வலுத்தால் வீட்டில் ஆங்காங்கு ஒழுக ஆரம்பித்துவிடும். பாத்திரங்களைப் பார்த்து ஒவ்வொரு இடத்திலும் வைக்க வேண்டும். எல்லாம் எனக்குச் சகஜமாகி விட்டது. இங்கு அமர்ந்து நான் யோசிக்கும்போது என் பலகீனம் நன்ருகப் புரிகிறது. இன்று கடன் வாங்கி மருந்து வாங்கி என் மகனைக் காப்பாற்றி விடலாம். ஆனல் நாளைக்கு? என் வயிற்றில் பிறந்த தோஷத் திற்காக இன்று இல்லாவிட்டால் நாளை அவன் இறக்கவேண்டி யது தானே? அவனுக்கு வந்திருக்கும் வியாதி கொடிது. அரசன் வீட்டு உணவு தந்தால் தான் அவன் உடல் தேறும். இன்று வியாதியால் மடிவான், அல்லது நாளை பட்டினியால் போவான். நான் குழந்தையைத் திரும்பிப் பார்க்கவில்லை. இந்தாருங்கள்-இடித்த புளி மாதிரி உட்கார்ந்திருந்தால் எப்படி? ஏதாவது வழி செய்யக் கூடாதா?’ என்று கண்ணிர் மல்க, தொண்டை அடைக்க என் மனைவி புலம்புகிருள்.