பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 2 அண்ணல் காட்டிய வழி ' கரைத்த புளி மாதிரி ஒடுவதற்கு என் கையில் பணம் இல்லையே ? இடித்த புளி மாதிரி சமைந்து கிடக்கிறேன். என்னை என்ன செய்யச் சொல்கிருய்?' என்று நான் சீறி விழுந்தேன். அவள் தன் புடவை முந்தாணியை வாயில் அடைத்துக் கொண்டு விம்மியபடியே பின்புறம் போனுள். நான் கல்லாகச் சமைந்து கிடந்தேன், கூடத்தில் நினைவின் றிப் போராடும் என் ஒரே குழந்தையைப் பார்த்தேன். மீண்டும் திரும்பிக் கொண்டேன். வீட்டுக்காரன் வந்து விட்டுப் போனன். கூரையிலுள்ள பொத்தல்களைப் பழுது பார்க்க மாட்டாளும். நான் காலி செய் தால் அவனுக்கு நிறைய வாடகை வருமாம். வீட்டை விட்டு வெளியேறும்படிக் கூறி விட்டான். என் மனைவி கோபித்துக் கொண்டு எங்கே போளுளோ ? அவள் உடலிலும் தாலியைத் தவிர நகை இல்லை. எல்லாம் உரித் தாகி விட்டது. நடுக்கடல் வரை இறங்கி விட்ட ஒருவன் அலை அடிக்குமே என்று பயப்படத்தான் முடியுமா ? பயந்துதான் எங்கு போக முடியும்? அப்படி ஒரு நிலையில் என் மனம் மரத்து நின்று விட்டது. கஷ்டம் வந்தால் மனம் குழம்பும் என்கிருர்கள் எனக்கு அப்படித் தோன்றவில்லை. துயரம் வரும் காலையில் தான் புத்தி மிகத் தெளிவாக, நிலையாக இருக்கிறது. எனக்கு வருத்தமோ படபடப்போ தோன்றவில்லை. நான் உயிரோடு இருந்து என்ன சுகத்தைக் கண்டுவிட்டேன். என் மகன் இறந்து போனல்தான் என்ன? அவன் பிழைத்தெழுந்ததும் அவனுக்கு என்ன பெரு வாழ்வு நான் அளித்துவிடப் போகிறேன் ? - நான் ஒரு ஏழையின் மகளுகப் பிறந்தேன். என் தந்தையை விட என்னை ஏழையாக ஆக்கிவிட்டது பொருள்களின் அகவிலை. என் தந்தை ஒரு சிறிய பிள்ளையார் கோவில் பூஜை செய்து வந் தார். தவிரவும், குளத்தங்கரை அரச மரத்தடியில் அமர்ந்திருப் பார். அங்கு ஸ்நாநம் செய்ய வருபவர்கள், அரசமரம் சுற்றுப வர்கள், பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் இப் படி யாராவது தட்சிணை தருவார்களா என்று ஏங்கிக் கிடப்பார். ஏழ்மையிலேயே பழகிப் போராடி அவர் மனமே ஒரு தினுசாகி விட்டது. இரண்டளு காசுக்காக அவர் சில பொய்களைச் சொல்லி விடுவார். - - சில சமயம் அவர் கடினமாகப் பேசுவார். இந்த ஊரில் இன்னும் நிறைய பேர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல்