பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுத்தமா 93 இருக்கவேண்டும் என்று தினமும் பிள்ளையாரை வேண்டுகிறேன். ' என்பார் . என் அம்மா சிரிப்பாள். ' அத்தனை பேரும் உங்கள் அரச மரத்தைச் சுற்றிஞல் அல்லவா உங்கள் வேண்டுகோள் நிறை வேறும் ? இப்பொழுதெல்லாம் அவரவர்களும் பட்டணக்கரையில் சென்று வைத்தியமல்லவா செய்து கொள்கிரு.ர்கள் ? ' என்பாள். இருவரும் சிரிப்பார்கள். எனக்கு புத்தி தெரிய ஆரம்பித்ததும் எனக்கு அவர்கள் பேச்சு ரசிக்கவில்லை. அதற்குமுன் என் தாயின் பின்னடியே எங்கு தின்பண்டம் கிடைக்கும், எங்கு ஒரு பைசா கிடைக்கும் என்று ஏங்கி ஓடிக்கொண்டிருப்பேன். நாளடைவில் அதில் எல்லாம்கூட என் மனம் லயிக்க மறுத்தது. நாங்கள் குடியிருந்த சத்திரத்திற்கு ஒரு நாள் ஒர் இளைஞர் வந்தார். நல்ல தேஜஸ்ான முகம், தீர்மையான நாசி, தெளி வான பெரிய கண்கள்-தபஸ்விபோல இருந்தார் அவர். தூய கதர் ஆடை உடுத்து, கையில் ஒரு புத்தகத்துடனும், ஒரு சிறு பையுடனும் அவர் நுழைந்ததும் எனக்கு என்னவோ ஒருவித சிரிப்பு ஏற்பட்டது. கருகருவென்ற தலைமயிரைப் பின்னடி வாரி விட்டிருந்தார் அவர். அதே கருகருவென்ற தாடி அவருக்குக் கம்பீரத்தை அளித்தது. நான் அப்பொழுது திண்ணைtது படுத்துப் புரண்டுகொண்டே திருக்குறள் மனப்பாடம் செய்துகொண்டிருந்தேன். என்னைப் பிடித்து எழுப்பினர் அந்த இளைஞர். அழுக்குப் பிடித்த என் பக்கத்தில் அவர் அமர்ந்துகொண்டார். மெதுவாகப் பேச்சுக் கொடுத்து என்னைப்பற்றி விசாரித்தார். திருக்குறளின் மேன் மையை விளக்கி, அதைப் படிக்கும்போது பக்தி சிரத்தையோடு படிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அன்று மாலை பொதுக்கூட்டத்தில் திருக்குறள் போட்டி நடக்கப் போவ தாகவும், அதில் ஐந்து ரூபாய் பரிசு வைத்திருப்பதாகவும் அதற் காகப் படிப்பதாகவும் கூறினேன். அவர் என்னவோ போலச் சிரித்தார். பிறகு என்னைத் தன்னுடனேயே இருத்திப் பேச்சுக் கொடுத்தார். அன்றையப் பொதுக் கூட்டத்தை நடத்தவே அவர் வந்திருந்தார் என்பது பிறகு விளங்கியது. அன்று பரிசு பெற்றேன் நான். அதைக்கொண்டு ன்ை தாயிடம் தரும்போது அவரும் என்னுடன் வந்தார். என்னைத் தன்னுடனேயே அழைத்துச் செல்ல என் தந்தையை அநுமதி கேட்டார். ஐந்து குழந்தைகளில் ஒருவன் குறைவதை அவர்கள்