பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அண்ணல் காட்டிய வழி பொருட்படுத்தவில்லை. அல்லது, அவளுவது எங்காவது வயிருற உண்ணட்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ. நான் அவருடன் வார்தாவுக்குப் போனேன். அங்கேயே படித்தேன், பயிற்சி பெற்றேன். பெரியவனகி என் ஊர் திரும்பினேன். ஆசிரியப் பயிற்சி பெற்று எங்கள் ஊரிலேயே பணி புரியலா னேன். என் பெற்ருேங்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்ற பேரவா என் மனத்துள் இருந்தது. நாளடைவில் அவர்கள் இறந்துவிட்டார்கள். என் இரு தங்கைகளுக்கும் மணம் செய்து அவர்களைப் புக்ககம் அனுப்பி விட்டேன். என் உடன் பிறந்த சகோதரர்கள் வேலை தேடி எங்கோ நகரத்திற்குச் சென்று விட்டார்கள். நான் மட்டும் எனக்கு குருவாக விளங்கிய அந்தக் கதராடை இளைஞரின் வாக்குப்படி இன்றுவரை எளிய வாழ்க்கையும் நேர்மையுமாகக் கண்ணியமாக வாழ்கிறேன். ஆயின் ஏழ்மை கொடிய வியாதி. அதை விரட்டி அடிக்க எனக்கு வழி தெரிய வில்லை. மணம் புரிந்துகொண்டேன். மக்கள் பிறந்தன. இறந்தன. இன்று இந்த ஒருவன்தான் மிஞ்சியிருக்கிருன். அவனும் சற்றுப் பொறுத்து என்னவாக ஆவானே ? நான் கூடத்திற்குச் சென்று மகனின் அருகில் அமர்ந்தேன். எட்டு வயதுச் சிறுவன். எலும்பும் தோலுமாகக் கிடந்தான். தொண்டையில் வந்து அடைந்துவிட்டது. கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான். பெரிய கண்கள். தெளிந்த தடாகங்கள் போன்ற கண்கள் என்னைச் சீர்தூக்கிப் பார்த்தனவோ? என் உடல் பலம், மனவலுவு யாவற்றையும் திரட்டி ஓர் அமைதியான சிரிப்புச் சிரித்தேன். கீதையைப் பிரித்தேன். அவனுக்குக் காது கேட்கும்படிப் படிக்க ஆரம்பித்தேன். அவனுக்கு மனப்பாடமானபடியால் கேட்டுக்கொண்டே யிருந்தான். அவன் மூச்சு முட்டத் தவிப்பது எனக்கும் தெரிந்தது அவனுக்கும் தெரிந்தது. தெரியா தது போல இருவரும் பகவத்கீதையில் ஈடுபட்டோம். என் மனம் தளராமலிருக்க வேண்டும் என்று ஆண்டவனத் துதித்த வண்ண மிருந்தேன். என் மனைவி எங்கு சென்ருளோ ?