பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுத்தமா 95 குழந்தை தூங்கி விட்டானே ? இல்லை... ? அவன் கண்கள் மூடியிருப்பதைப் பார்த்தேன். அதற்குள் என் மனைவி டாக்டரு டன் உள்ளே நுழைந்தாள் ! என் வியப்பை அடக்கிக் கொண்டு ஒதுங்கி நின்றேன். என்னை வெட்டிவிடும் பார்வை ஒன்றை வீசி விட்டு அவள் வைத்தியருக்கு ஒத்தாசை செய்தாள். அவர் ஊசி மருந்தை ஏற்றிவிட்டுப் போய்விட்டார். " எப்படி வாங்கிய்ை மருந்து டாக்டரை எப்படிச் சந்தித் தாய் ?' என்று நான் கேட்ட கேள்விக்கு மனைவி பதில் சொல்ல வில்லை. அதற்கு மாருக அவள் என்னையே மடக்கிளுள். 'ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறதே? உங்கள் காதுக்கு ஒன்றுமே எட்டவில்லையா? ' என்று என்னைத் தாக்கினுள் அவள். ' என்ன ?' என்று கேட்ட எனக்கு, விஷயம் தெரியாமல் இல்லை. ' என்னவா ? வீட்டிலேயே களி மண் கட்டியாட்டமா விழுந்து கிடந்தால் எப்படி ? லாட்டரி விழுந்து விட்டதாமே, போய்ப் பார்த்தீர்களா ? ' - பார்த்தேன்.' ' என்ன, என்ன ! போய்ப் பார்த்தீர்களா ? நமக்கு வர வில்லையாக்கும். யாருக்கு வந்ததாம் ? எவளுவது பணக்கார னுக்குத்தான் விழுந்திருக்கும். நம் தசை நமக்குத் தெரியாதா?’’ அவள் பலவாறும் புலம்ப ஆரம்பித்தாள், - 1. உஷ் சத்தம் போடாதே ! ' என்று அடக்கி அவளை அப்பால் அழைத்துப் போனேன். - ' என்ன எண் பரிசு பெற்றது தெரியுமா ? " என்று நான் கேட்டான், மெதுவாக. " இதோ எழுதிவந்தேனே ! 5342. இன்னமும் இதற்கு உரி யவர் வரவில்லையாம். அதனல் பெயரைப் போடவில்லை, யாருக்கு அடித்ததோ ? ' இதோ பார். சத்தம் போடாதே. நம் பூரீநிவாசனுக்குத் தான் கிடைத்திருக்கிறது. இதோ பார்த்தாயா? " என்று கூறி அவளுக்கு என்னிடமுன்ள லாட்டரி டிக்கட்டைக் காட்டினேன்? அவள் வாயடைத்துப் போளுள். அட,பாவி, அவன் தான் பணத்திலே புரளுகிருனே ! இன்னமும் கிடைத்தால் என்ன செய்யப் போகிருன் ? வாரி இறைப்பான். '