பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 6 *. அண்ணல் காட்டிய வழி

  • அது அவன் பாடு.

என் மனைவி ஒரே கணம் நிதானித்தாள். உடனே என்னிடம் வந்து யோசனை கூறினள். அவள் முகம் தன் புத்தியின் மேன்மை யில் பூரித்துப் போயிருந்தது. பூரீனிவாசனுக்கு இந்த எண் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ? ' " நான் தானே வாங்கினேன் ? ' ! உங்கள் எண் தான் இது ' என்ருள் அவள், தீர்மான Ls}fT3Es இல்லை, அவனுக்காக எடுத்த எண் தான் இது ” என்று நானும் தீர்மானமாகக் கூறினேன், யார் அறிவார்கள் ? அவன் பெயர் கூட டிக்கட்டில் இல்லை. உங்கள் மனசில் தானே இந்தப் பாகுபாடெல்லாம் ? பூரீநிவாச னுக்குத் தெரியாது. இந்தப் பணத்தைப் பெறுவது நமக்குப் பாவமாகாது. குழந்தை பிழைப்பான். பூரீநிவாசன் பணம் நாச மாகிறதே? இந்த ஒன்ருவது நல்லமுறையில் பயன்படட்டுமே? பேசாமல் உங்களுடையது என்றே சொல்லுங்கள். அவ்வாறே நினைத்துக் கொள்ளுங்கள் ' என்று அவள் புத்தி புகட்டினுள். நான் அவனுக்குத் தந்தி அடித்துவிட்டேன் ' என்றேன் நான், வெற்றி முறுவலுடன். அவள் தலையில் பளிர், பளிர் என்று அடித்துக் கொண்டாள். “ இப்படியும் ஓர் அசட்டுத்தனமா ? அவனுக்கு இந்த ஆயிரம் ரூபாய் வரவா, செலவா? அவன் கண்டான ? பேசாமல் உங்க ளுடையது என்று சொல்லவேண்டியதுதானே ? வெண்ணெ யைத் திரட்டிக் கையில் கொடுத்தால் அதைச் சாக்கடையில் எறிவார்களா ?’ என்று அவள் புலம்பினள். -

  • இதோ பார். இதெல்லாம் யோசிக்க நமக்கு நேரமில்லை. குழந்தை உயிருக்கே மன்ருடுகிருள். நாம் அங்கு சென்றிருந்து ஆண்டவன் பெயரையாவது உச்சரிப்போம்' என்றேன்.

அவள் காளி உருவம் எடுத்துவிட்டாள். கண்கள் பிதுங்க, பல்லே நெற நெறவென்று கடித்தாள். அடங்கிப் பழகி விட்ட தல்ை தான் என்னை அடிக்கவில்லை, இன்றேல் அவளுக்கு அப் பொழுது வந்த ஆத்திரத்தில் என்னேக் கொன்றுவிட்டிருப்பாள், “ என் வயிறு எரிகிறதே ? என் மகனைக் கொன்ற பாவியல் லவா நீங்கள் ! தந்தி கொடுக்க உங்களிடம் பணமேது ? அது என் மகனுக்கல்லவா பயன்பட்டிருக்கவேண்டிய பொருள் ?” என்று அவள் அழுது தீர்த்தாள்.