பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுத்தமா 97 அவளது பெற்ற மனத்தின் வேதனையை நான் உணராமல் இல்லை. ஆயினும் என் மனம் நேர்மையினின்று தளர இடம் தரவில்லை. என் மகன் அருகில் நான் அமர்ந்தேன். கிழித்த நார் போல் கிடந்தான் அவன். - வேண்டாம் என்று தடுத்தாலும் என் மனம் அவன் நிலையை ஆராயாமல் விடவில்லை. இனி எத்தனை நேரம் இந்தக் குழந்தை இங்கு கிடப்பான் ? பிறகு ? பிறகு என்று நினைத்துப் பார்க்கக் கூட எனக்குத் தைரியம் இருக்கவில்லை. மனைவியின் விசும்பல் அடங்கியது. அவளும் என்னருகில், குழந்தையின் காலடியில் வந்து விழுந்து கிடந்தாள். அழுது அழுது அவள் சக்தியிழந்துவிட்டாள் போலும், என்னைத் தொட்டு எழுப்பினுள் அவள். அவள் கண்கள் கெஞ்சின. இப்பொழுது தான் என்ன ? அந்த எண் உங்களு டையது என்று கூறிவிடுங்களேன் 1’ என்றிரைஞ்சியது அந்தப் பார்வை. நான் தெய்வமல்ல. நான் மகான் அல்ல, எல்லாம் வென்ற தபஸ்வியுமல்ல. அந்தக் குரு அளித்த பயிற்சி என்னுள் ஊறி விட்டது. உடலிலும் குடிகொண்டு விட்டது. அவ்வளவுதான். என் வீட்டின் அவல நிலையும், என் ஒரே குழந்தையின் மரண அவஸ்தையும், என் மனைவியின் இதயத் துடிப்பும் என்னை மிருகத் தினும் கீழான நிலைக்கு இழுத்துச் செல்ல முயலவில்லையா? என் னுள் ஏற்பட்ட போராட்டம் எனக்கல்லவா தெரியும் ! விடிய விடியக் குழந்தையின் அருகில் அமர்ந்திருந்தேன். விடிந்ததும் டாக்டரைத் தேடிச் சென்றேன். அவர் கிளம்பச் சற்று நேரமாகும் என்றபடியால் அருகிலுள்ள பள்ளிக்கூடத் திற்குச் சென்றேன். அந்த டாக்டரின் முயற்சியால் அங்கு ஓர் இலவச வைத்தியசாலை நடந்து வந்தது. அதன் கட்டட நிதிக் காக லாட்டரி வைத்திருந்தனர். போன தடவை என் நண்பன் பூரீநிவாசன் வந்திருந்தபோது வீடு வீடாக டிக்கட்டு விற்க வந்திருந்தனர். அவன் அலட்சிய மாக இரண்டு ரூபாய்களை என்னிடம் தந்து இரண்டு டிக்கட்டு வாங்கச் சொன்னுள். எண்ணைக் குறித்துக்கொள்ளக்கூட மறுத்து விட்டான். . . நேர்மையாகப் போடமாட்டார்களடா நமக்கெல்லாம் வராது. உள்ளுக்குள் ஆள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கே &т—7. -