பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அண்ணல் காட்டிய வழி போகும், பரவாயில்லை. இரண்டு ரூபாய் தர்மம் ' என்ருன் அவன். அவனிடமிருந்து ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டேன். சீனு, நேர்மை என்பது உலகத்திலிருந்தே அழிந்துவிடவில்லை’ என்றேன். 'போடா, முட்டாள் ! இந்த உலகமே கள்ளச் சந்தை. அதல்ை தான் செழிப்பாக இருக்கிறது. அதன் நடுவில் நேர்மை இருக்குமானல் அது உன் போலத்தான் இருக்கும். நீ இருக்கிருய், பார். உடுக்க உடுப்புக் கிடையாது, குடிக்கக் கஞ்சி கிடையாது. வாயிலே கொள்கை, மனசிலே பிடிவாதம், நல்ல காலம், நாட் டிலே நேர்மை குறைவாக இருக்கிறது ”” என்று கூறி அவன் கடகட வென்று சிரித்தான். - அவன் ரூபாயை அவன் மீதே எறிந்துவிட என் மனம் துடித் தது. ஆயினும் அடக்கிக்கொண்டேன். 'உன் இருட்டு மனசை வெளிச்சமாக்கவாவது உனக்கே பரிசு வரவேண்டும் ' என்றேன். அன்று கூறியது இன்று பலித்தது. டாக்டர் அந்தக் குலுக் கலைத்தான் நடத்திக்கொண்டிருந்தார், அப்போது. நான் அது முடியும் வரை இருந்து விட்டு விஷயத்தைச் சொல்லி அவரை என் வீட்டிற்கு அழைத்தேன். அவர் ஓடோடி வந்தார். அதிருஷ்ட எண்ணைக் குறித்துக் கொண்டு வந்த நான், அவர் போன பிறகு தான் பார்த்தேன். பூரீநிவாசனின் எண்ணிற்குத்தான் பரிசு வந் திருந்தது, என் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தது என்னை எள்ளி நகையாடியது. அதைக் கண்டதும் என் மனம் தவிக்கவில்லையா ? என் புத்தி பேதவிக்கவில்லையா ? நான் ரிஷியா, முனியா ? சதையும் ரத்த மும் கொண்ட சாதாரண மனிதன் தானே ? குறிப்புப் புத்தகத்தின் ஏட்டைக் கிழிக்க என் கை ஓடியது. மகனின் உடல் நிலையைப் பற்றிய துயரத்தின் வேலை அது. பெற்ற மனத்தின் பித்து என்னைப் பலவாறும் தூண்டியது. யூரீநிவாசன் இதனால் ஒன்றும் கஷ்டப்படப் போவதில்லை. ஆயின், என் வாழ்க் கையே மேன்படும். என் மகன் பிழைப்பான். என் வீடு நிலைக் கும். நான் தலைநிமிரலாம். - ஆனல் என் கை பதறியது. புழுதியில் புரளாதே !’ என்று என் குருநாதர் எச்சரிப்பதுபோல ஒரு பிரமை தட்டியது. என் குறிப்புப் புத்தகத்தில் அந்தக் குருத்துத் தாடியும், ஊடுருவும் கண்களும், தெளிந்த பார்வையும் தெரியக் கண்டேன். உடனே கண்களை இரு கைகளாலும் பொத்தி மன்னிப்புக் கோரினேன்;