பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுத்தமா 99 என் சட்டையில் இருந்த சில்லறையைக் கொட்டி எண்ணி னேன். தபாலாபீசுக்குப் போய்த் தந்தியைக் கொடுத்து விட்டு வந்த பிறகே என் பரபரப்பு அடங்கியது. என் தவற்றிற்கு ஈடு செய்ய ராமநாமத்தை ஜபித்துக்கொண்டு முற்றத்துக் குறட்டில் அமர்ந்தேன். என் மனைவி என்ன அறிவாள், பாவம்! என்னை நிந்தித்தாள். தானே வெளியே சென்ருள் அந்த மழைத் துாற்றலில். வைத்தி யரை அழைத்து வந்தாள். டாக்டர் எப்படி வந்தார் ? மருந்துக்குக் காசு ஏது ?’’ என்று மீண்டும் நான் கேட்டேன். தன் கழுத்துத் தாலிச் சரட்டைக் காட்டினுள் அவள். அதி லிருந்த தங்கத் திருமாங்கல்யத்திற்குப் பதிலாக ஒரு மஞ்சளைக் கட்டியிருந்தாள். ' விற்றுவிட்டாயா ? ' ' விற்கப் போனேன். ஆனால் அந்தக் கடைக்காரன் வாங்க மறுத்துவிட்டான். என் கண்ணிரைப் பார்த்துக் கடனுகத் தந் தான். அவளால் பேசமுடியவில்லை. அந்த அன்னையின் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. என் கண்களின் கடையில் கசிவு இருப்பதை உணர்ந்தேன். அவளே எழுந்தாள். இடுப்பில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து மீண்டும் கயிற்றில் கோத்துக் கட்டிக்கொண்டாள்.

  • கடனை எப்படித் திருப்புவாய் ' என்று நான் இரக்கமற்றுக் கேட்டேன்.

' வீட்டிலுள்ள பாத்திரங்களை விற்பேன் ' என்ருள் அவள், உறுதியாக. கூடத்து மூலையில் மழையை ஏந்திக்கொண்டு நின்ற அண்டா வைப் பார்த்தேன். மழை நன்ருக வலுத்துவிட்டது. அப்பொழுது சிலர் வீட்டிற்குள் வந்தனர். வாத்தியார், சார்! ' என்று அழைத்தனர். என்ன ? என்று கேட்டுக்கொண்டே போனேன். உங்கள் டிக்கட்டு எண் என்ன, சார் ? முதற் பரிசு வந்தவர் யார் என்று தெரியவில்லையே? நீங்களும் வாங்கினர்கள். பேசாமல் இருந்துவிடப் போகிறீர்களே என்று வந்தோம். உங்கள் பையனுக்கு வேறு உடம்பு சரியில்லையாமே ? ' கமிட்டி யைச் சேர்ந்தவர்கள் வளவளவென்று பேசினர்கள்.