பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுத்தமா I O I ஒரு முட்டாளைக் கட்டிக் கொண்டதனலேயே உங்கள் மூளையும் மழுங்கி விட வேண்டுமா ? இந்த நிலைக்கு வரும்வ்ரை என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ? எனக்கு ஒரு வரி எழுதக் கூடாதா? ' என்று அவன் கடிந்து பேசினன். அவள் பதிலே சொல்லவில்லை. இதுவரை அடங்கியிருந்த அவள் துக்கம் பீறிட்டு வந்தது. அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் கதறினள். நான் என் மகனின் தலைமாட்டில் கற்சிலையாக அமர்ந்தேன். அந்தச் சிறு உடலில் லேசாக மூச்சு இழையோடியது. நான் எதிலும் ஒன்ருமல் அங்கேயே கிடந்தேன் : பூரீனிவாசன் எங்கோ போனன். யாரோ வந்தார்கள், யாரோ போளுர்கள். டாக்டர் வந்தார். மாலை நேரம் வந்தது கூடத் தெரியவில்லை எனக்கு. புரீநிவாசன் என்னத் தட்டி எழுப்பினன். எழுந்திரடா !” என்ருன். தெருவில் ஆஸ்பத்திரி வண்டி நின்றது. அதில் குழந்தை யையும் என் மனைவியையும் ஏற்றினர்கள். என்னை பூரீநிவாசனின் வண்டியில் யாரோ தள்ளினர்கள் மயக்கமுற்ற நிலையில் நான் அவர்களைத் தொடர்ந்தேன். நேரம் ஆக ஆக என் மகனின் உயிரைப் பற்றி நம்பிக்கையே அற்று விட்டது. அவன் அருகில் இருந்தபோது இரண்டுமுறை என் உடல் லேசாக வலித்ததைக் கண்டேன். யாரிடம் சொல்வது? எதற்காகச் சொல்வது என்று மவுனமாகக் கீதைபாராயணம் செய்து கொண்டு அமர்ந்துவிட்டேன். என்னைச் சுற்றி நடந்தது ஒன்றுமே புரியவில்லை. இதெல்லாம் நடந்து ஒரு வாரமாகிவிட்டது என் பிள்ளை பிழைத்து விட்டான். என் மனைவி அவளுேடு வைத்தியசாலை யில் இருக்கிருள். நான் என் நண்பன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். - பூரீநிவாசன் வந்தான். என்னைத் தழுவிக்கொண்டான். வியப்பு மேலீட்டால் நான் அவனையே பார்த்தேன். எவ்வளவு பெரிய முட்டாளடா, நீ? வேறு யாராவது உன் நிலையில் இருந்திருந்தால் இப்படிக் கைக்குக் கிடைத்த பணத்தை இழப்பான ?  ; , * ... , நான் ஒன்றுமே பதில் சொல்லவில்லை;