பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 02 அண்ணல் காட்டிய வழி அன்று என் உள்ளத்திலே பெரிய அதிர்ச்சியடா. எந்த மனிதனும் ஒரளவுதான் நேர்மையாக இருக்க முடியும், நெருக்கடி யில் பிறழாதவனே கிடையாது என்று அடித்துப் பேசிய என்னை நீ மாற்றிவிட்டாயடா. ஊரார் உன்னை எப்படி மெச்சினர்கள் தெரியுமா? என்னிடமுள்ள செல்வம் உன்னிடம் இருந்தால் உலகமே உய்யும். என்னுடையது ஒரு குடும்பத்துக்கேனும் உதவட்டும் என்று தீர்மானித்துவிட்டேன். இனி நீ என்னுடன் தான் இருக்கவேண்டும். உன் மகன் இனி என் மகன். என்ன? ' உணர்ச்சியோடு பேசினன் பூரீநிவாசன். நான் வெறும் மனிதன்தானடா. எனக்கும் சபலம் உண்டு ' என்றேன். நான், கரகரத்த குரலில். ஆனல் சபலத்தை வென்று நிலையாக நின்ற என் நேர்மை என் இதயத்தில் பெரியதொரு அமைதியையும் ஒளியையும் நிரப்பியது. அதன் மத்தியில் என் குருநாதரின் முகம் ஜோதியினுள் அருட்ஜோதியாக என்னைக் கண்டு முறுவலித்தது.