பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 1967ஆம் ஆண்டு அக்டேர்பர் மாதம் முதல் வாரம், சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத் தில் அண்ணல் காந்திஜியின் பிறந்த நாள் விழா இனிது கொண்டாடப்பட்டு வந்தது. விழாப் பேச்சுக் களைக் கேட்டு மகிழச் சென்றிருந்த எனக்கு, அங்கு ஒரு பாக்கியம் காத்திருந்தது. முதுபெரும் எழுத் தாளரும், மஞ்சரி'யின் ஆசிரியருமான திரு. தி. ஜ. ர. அவர்கள், அன்பர் ஒருவருக்கு என்னை அறிமுகப் படுத்தி வைத்தார். அவர்தான் காந்தி நினைவு நிதியின் செயலாளர் திரு. க. அருளுசலம் அவர்கள். அவருடன் அளவளாவி வரும்போது, மகாத்மாவின் உயிருக்குயிரான சத்தியம், அகிம்சை, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, வகுப்பு ஒற்றுமை, மாதர் முன்னேற்றம் போன்ற பல தத்துவங்களை உள்ளடக் கியும், மையக் கருத்தாகக் கொண்டும் எழுதப்பட்ட சில தமிழ்ச் சிறு கதைகளைத் தொகுத்து ஒரு நூலாக தமிழ்நாடு காந்தி நினைவு நிதி வரவிருக் கும் காந்தி நூற்ருண்டு விழாவினை ஒட்டி வெளி யிடுவது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தைத் தெரிவித்தேன். இதற்கு காந்தி நினைவு நிதியின் சம்மதத்தைப் பெற்று, அத்தகைய சிறு கதைகள் ஐம்பதைத் தொகுத்துத் தரும் ஒரு பாக்கியத்தையும் அவர்கள் எனக்கு அளித்தார்கள். இந்தக் கதைகளை நன்கு தொகுத்து வரும்போது திரு. க. அருளுசலம் அவர்களும், மதுரையிலுள்ள அவருடைய காரியால யத்தினரும் செய்த உதவிகளுக்கும், அளித்த உற் சாகத்துக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள் ளேன். காந்திஜியின் தத்துவங்களை விளக்கும் சிறு கதைகள் ஒரு தொகுப்பாக வெளிவரப்போகிறது என்பதை அறிந்ததும், தாங்கள் எழுதிய கதை களேத் தேடித் தந்தும், புதிதாகக் கதைகளை