பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பாலகிருஷ்ணன் I2 மனிதருள் ஒரு தேவன் பத்திரிகைச் செய்திகளைப் படித்து விட்டுப் பரபரப்புடன் பதினைந்து நாள் ரஜாவில் பஞ்சாபுக்குப் புறப்பட்டுச் சென்ற சுபேதார் மல்ஹோத்ரா, கிளம்பிச் சென்ற பன்னிரண்டாவது நாளே முகாமுக்குத் திரும்ப நேர்ந்த விபரீதத்தை விதி என்று ஏற்றுக்கொண்டு ஆறுதல் பெறுவது எளிதன்று. விடுதிக்குக்கூடச் செல்லாமல் ஹோல்டாலும் கையுமாக நேரே அலுவலகக் கூடாரத்திற்குள் நுழைந்த சுபேதாருக்கு இராணுவ சம்பிரதாயப்படி மரியாதை செலுத்தக்கூடத் தோன்றவில்லை எனக்கு. அப்படியிருந்தது அவரது தோற்றம் ! வேதனை தோய்ந்த முகம்; ஒளியிழந்த கண்கள். அந்த உதடு களில் வழக்கமாக நெளியும் புன்னகையைக் கூடக் காளுேமே, இன்று ! நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்த வாறு நாற்காலியில் அமர்ந்துக் கால்களை நீட்டிச் சாய்ந்து கொண் டார் மல்ஹோத்ரா. 'சர்தார்ஜி ! என்ன நடந்தது..? என்னவோ போலிருக்கிறீர் களே... ' என்றேன் தயக்கத்துடன். எங்கோ சூன்யத்தில் லயித்த பார்வையை என் பக்கம் திருப்பி 'உம். என்ன கேட்டீர்கள், பாலு...? என்ன நடந்தது என்ரு ? உ.ம்... எல்லாம் முடிந்து விட்டது, பாலு எல்லாமே தான் ! இனி நடக்க வேண்டியது ஒன்றும் பாக்கியில்ல்ை 1’ மல்ஹோத்ரா வின் கண்கள் கலங்கியதை அப்போதுதான் முதல் தடவையாகப் பார்த்தேன். பிறர் துன்பத்தையெல்லாம் துடைக்கும் அமைதி துலங்கும் மல்ஹோத்ராவின் முகத்தில் ஏன் இந்தச் சோகம் !