பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 04 மனிதருள் ஒரு தேவன் அதை மறைக்க விரும்புகிறவர் போல் மேசையின் மீது முகத் தைக் கவிழ்த்துக் கொண்டார். பஞ்சத்து ஆண்டியாகப் பட்டாளத்தில் சேர்ந்தவரல்லர், மல்ஹோத்ரா. அவரது தந்தை, பாட்டனர் எல்லாருமே ராணுவ பரம்பரையினர். பரம்பரை வாசனைதான் படித்துப் பட்டம்பெற்ற மல்ஹோத்ராவையும் ராணுவ சேவைக்குக் கவர்ந்து இழுத்தது போலும். படிப்பில்ை பெற்ற அறிவு அவரது ஒவ்வொரு சொல்லிலும் சுடர்விடும். கீதை முழுவதும் அவருக்கு மனப்பாடம். எவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பத்தி லும் அவர் நிதானமிழக்காமலிருப்பது எனக்கு வியப்பூட்டும். சுருள் சுருளாக வளர்ந்திருந்த தாடியைக் காதருகிலிருந்து சேர்த் துச் சீவி, முறுக்கி முகவாய்க்கட்டைக்கும் கீழே அவர் முடிபோடும் முயற்சியில், அறுந்து அறுந்து விழும் தக்ளியில் நூல் நூற்பவ னின் விடாமுயற்சியையும் பொறுமையையும் காணலாம். அத்தகைய உறுதியும் சாந்தமும் நிறைந்தவரா இன்று இவ்வாறு நிலைகுலைந்து காணப்படுகிரு.ர்.. ? மேசையின் மீது முழங்கையை ஊன்றி நிமிர்ந்து உட்கார்ந்து, நடந்ததைச் சுருக்கமாகக் கூறுகிறேன், பாலு சாப்பிடப் போயிருக்கும் ஜவான்கள் திரும்பி வருவதற்குள் முடித்துவிட வேண்டும். என் துயரத்தை எல்லோர்மீதும் ஏன் திணிக்க வேண்டும்? இங்கிருந்து கிளம்பும்போது பதினைந்து நாட்கள் ரஜா எப்படிப் போதும், என்ற குறையோடுதான் ரயிலேறினேன். ஆசை மனேவியுடனும் அன்புக் குழந்தைகளுடனும் இன்னும் பத்து நாட்கள் தங்கியிருக்க மாட்டோமா என்ற ஆதுரம் எந்தத் தகப்பனுக்குத்தான் இராது ? ஆளுல்... நாம் நினைப்பதெல்லாம் நடந்தேறுவதில்லையே ! அதிருக்கட்டும், முதலில் என் கிராமத்தின் அமைப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். - சட்லெஜ் நதியிலிருந்து பிரியும் ஒரு சிற்ருறு, கிழக்கு மேற்குப் பஞ்சாப் மாகாணங்களுக்கு அந்தப் பகுதியின் எல்லையாக அமைந் துள்ளது. பதினன்கு வருடங்களுக்கு முன்பு என் கிராமத்தின் அருகில் ஒரு காங்கிரீட் பாலம் கட்டினர்கள், பாலம் ஏற்படு வதற்கு முன்பெல்லாம் படகில்தான் ஆற்றைக் கடக்கவேண்டி யிருந்தது. ஆற்றுக்குக் கிழக்கேயுள்ள மோரார் கிராமத்தில் தான் பள்ளிக்கூடம் இருந்தது. ஆறு மிகவும் குறுகலானது. ஆனல் ஆழம் அதிகம். தவிர, அந்தப் பிரதேசம் சமநிலமான தன்று. வடக்கே பூமி உயர்ந்தும் தெற்கே பள்ளமாகவும் இருப் பதால், கோடையில் வெள்ளம் குறைவாக இருக்கும்போதுகூட வேகம் கடுமையாக இருக்கும். நான் பள்ளியில் படித்த நாட்க ஒளில் காலை, மாலே இருவேளைகளும் ஆற்றைக் கடந்து செல்ல