பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பாலகிருஷ்ணன் I 05 வேண்டியிருந்தது. சுழியிட்டுச் செல்லும் பிரவாகத்தின் குறுக்கே மிதந்து செல்லும் படகில் நண்பர்கள் புடைசூழப் போய்வரும் அந்த ஆனந்தம். அந்த நினைவின் பசுமையிலே இன்று நான் அனுபவிக்கும் துன்பத்தை மறந்துவிட முயல்கிறேன், முடிய வில்லையே... பாலு : ' துயரம் நெஞ்சை வாட்டும்போது அதனை வாய்வழியாகத் தான் வெளியேற்ற வேண்டும் என்று நீங்களே சொல்லுவது வழக்கமாயிற்றே ? சொல்லுங்கள்!” என்றேன். மல்ஹோத்ரா தொடர்ந்தார் : ' இருபது முப்பது வீடுகள், சில குடிசைகள். சொற்ப ஜனத்தொகை - குஞ்சு, குளுவான் கள் உட்பட இருநூறுக்குள் தானிருக்கும். இதுதான் என் கிரா மம் அஸ்தமன நேரத்துக்கு நான் மோரார் போய்ச் சேர்ந் தேன். வழிநெடுகிலும் ஆள் அரவமேயில்லை. எனக்கு அந்தச் சூழ்நில்ை திகைப்பூட்டியது. தற்செயலாக எண்ணெய்ப் புட்டி யுடன் வந்த ஒரு சிறுவன விளித்து, ஏன் தம்பி : மோராரில் மனிதர்களே இல்லையா ? பக்கத்து கிராமத்தில் ஏதாவது திருவிழாவா... ? ' என்று விசாரித்தேன். சிறுவன் கேலியாகச் சிரித்தான். ஆமாம், திருவிழாத் தான். நீங்கள் எங்கே போகவேண்டும்? ' என்று கேட்டான்: நான் ஆற்றின் மறுகரையைச் சுட்டி, மில்காபூர் ' என் றேன்; அவன் வியப்புடன் விழிகளை உருட்டி, மில்காபூருக்கா ? என்ன இருக்கிறது அங்கே?' என்ருன். என்ன இருக்கிறதா? அசட்டுப் பயல் அதுதான் பையா, என் சொந்த ஊர்! என் குடும்பம், வீடு, குழந்தைகள்... எல்லாந் தான் இருக்கிறது : “ என்றேன் உற்சாகத்துடன். பிறந்த மண்ணுயிற்றே ! - - எனக்குப் பதில் ஏதும் கூருமல் எதிர்த்திசையில் நடந்தான் சிறுவன். நான் மறுபடியும் அவனை அழைத்தேன். அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அதன் கருத்து, பிறகுதான் விளங் கியது எனக்கு: - - - - வீதியைத் தாண்டி, கோதுமை வயல்களினுரடே செல்லும் ஒற்றையடிப்பாதை வழியே நடந்தேன். வானளாவ வளர்ந்து நின்ற சிடார் மரங்களுக்குப் பின்னல் ஒளிந்து பதுங்கிய கதிரவ னின் செவ்வொளியால் அந்த வட்டாரமே தீப்பற்றி எரிவது போலிருந்தது. ஆற்றுப் பாலத்தை அடைந்ததுமே என் கிராமம் இருந்த திசைநோக்கிப் பார்வை பறந்தது: