பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 06 மனிதருள் ஒரு தேவன் எதிர்க் கரையிலிருந்த அன்னையை நோக்கித் தாவும் குழந்தை போல என் உள்ளம் உவகையால் துள்ள, சிந்தனை சிறகடித்துப் பறக்க, பார்வை பாஜில்கா கிராமத்தில் பட்ட மறு விநாடி... என் உடலின் இரத்தமெல்லாம் உறைந்து விட்டது! கையிலிருந்த ஹோல்டாலும் பழக்கூடையும் நழுவி விழுகின்றன. கால்கள் துவளுகின்றன. என் உடலின் கனத்தையே கால்களால் தாங்க முடியவில்லைபோலும் ! என்ன இதெல்லாம் ? அருகிலிருந்த விளக்குக் கம்பத்தைப் பற்றியவாறு பாலத்தின் கைப்பிடிச்சுவரில் சாய்கிறேன். இதைக் காணவா நான் இவ்வ ளவு தூரம் வந்தேன்... ? அப்படி என்ன காட்சியைக் கண்டீர்கள்?' என்றேன் பரப் பரப்புடன். என் கிராமம் முழுவதும் தீக்கிரையாகிவிட்டிருந்தது ! எரிந்து கருகிக்கிடந்த கூரைகள்: சரிந்து விழுந்து நொறுங்கிக் கிடந்த ஒடுகள்; சேரிஇருந்த இடத்தில் சாம்பல் குவியல்கள் ! தபால் சாவடி இருந்த இடத்தில் தரையில் உருண்டு கிடந்த சிவப்புப் பெட்டி ! இடிபாடுகளைச் சுற்றிச் சுற்றி அலைந்து கொண் டிருந்த ஒரு கழுதை - இதுதான் நான் கண்ட காட்சி ! நாசியின் இரு துவாரங்களைப்போல், ஒன்றுக்கொன்று ஆதர வாக, எத்தனையோ தலைமுறைகளாக ஆற்றுக்குக் கிழக்கிலும் மேற்கிலுமாக அமைந்திருந்த இருகிராமங்களில் ஒன்று, இன்று மயானமாக விளங்குகிறது, பாலு மனிதனை மிருகமாக்கும் வெறித்தீக்குப் பலியாகி அழிந்துவிட்டது மதத்தின் பெயரால் நிகழ்ந்த அழிவு என் மனைவி, குழந்தைகள்... யாரிடம் விசாரிப் பது ? இன்னும் பத்து நாட்கள் முன்னதாக நான் புறப்பட்டுப் போயிருந்தால்...? ஆடு மேய்த்துவிட்டுத் திரும்பும் சிறுவர்களை யும் உல்லாசமாக ஆற்றங்கரையில் மீன்பிடிப்பவர்களையும் அந்த நேரத்தில் பாலத்தருகில் சகஜமாகக் காணலாம். ஹோல்டாலேயும் பழக்கூடையையும் நான் சுமந்து செல்ல விட்டிருப்பார்களா ? நான் முந்தி, நீ முந்தி' என்று என்னைச் சூழ்ந்துகொண்டு, கூலி கூடப் பேசாமல் என் கைச்சுமையைப் பிடுங்கியிருப்பார்களே ? முஸ்லிம், ஹிந்து, சீக்கியர் என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக் குத் தெரியாது. நம் ஊரான்; பட்டாளத்துக்காரன், கூலியைக் குறைக்கமாட்டான் என்ற ஒரு நம்பிக்கைதான் அவர்களுக்கு 1 ofລັກ, அரசியல் இதெல்லாம் அவர்களுக்குத் தேவையே யில்லை புரியவும் புரியாது - .”