பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பாலகிருஷ்ணன் 107 மோராரில் எண்ணெய்ப் புட்டியுடன் எதிரில்வந்த சிறுவன் பதில் பேசாமல் போனதன் காரணம் இதுதான் போலும் ! என் கிராமத்துக்கு நேர்ந்த நாசம் மோராருக்கும் நேர்ந்துவிடப் போகிறதோ என்ற பீதி காரணமாகத்தான் அங்கு மனித நடமாட்டமே இல்லையோ என்னவோ ! கீழே கிடந்த பழக்கூடை என்னை அனுதாபத்தோடு பார்த் தது. உன் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று எவ்வளவு ஆசையோடு சுமந்து வந்தாய், பாவம் ! என்று எனக்காக இரங் கியதோ ? கூடையை எடுத்துக் கொண்டு கரையிலிருந்து இறங்கினேன்; அருகிலிருந்த நாணற் புதரில் ஏதோ சலசலத்தது. நிஜார்ப் பையிலிருந்த பிச்சுவாவை வெளியே எடுத்தேன். மறுகணம், 'பாபுஜீ... ' என்று அலறிய வண்ணம் புதரிலி ருந்து வெளிப்பட்ட யுவதி என் காலடியில் விழுந்தாள். என் திகைப்பு நீங்கப் பல நிமிடங்களாயின.

    • ... חתת חט6r **

'பாபுஜி... நீங்களா... ? ? அவள் நிலையைக் கண்ணுற்ற எனக்குப் பேச்சே எழவில்லை. தலையோடு கால் என்னை ஒரு தடவை பார்த்துவிட்டுக் கூடையிலி ருந்து ஒரு பழத்தை எடுத்துக் கடித்தாள். நல்ல பசி, பாபுஜி! நேற்று முழுவதும் சாப்பிடவேயில்லை! ’’ என்ருள் ஸாரா. ‘'வேண்டிய மட்டும் சாப்பிடு ! யாருக்குக் கொடுப்பதென்று தெரியாமல், ஆற்றில் எறியப்போனேன். நல்ல வேளையாக, சாப்பிடுவதற்கு நீ ஒருத்தியாவது பாக்கி இருக்கிருயே ’’ உட்கார இடம் தேடினேன் கரையின் சரிவில். ' உட்கார வேண்டாம், பாபுஜி சீக்கிரம் புறப்படுங்கள். இங்கே இருப்பது ஆபத்து...' “虚...?” நானும் உங்களுடன் வருகிறேன். இனி எனக்கு வேறு யார் இருக்கிருர்கள்... ' விம்மல் அவளது பேச்சைத் தடைசெய் தது. பழக்கூடையைத் தூக்கிக் கொண்டு மோராரை நோக்கிப் புறப்பட்டாள். ஸாரா. ஹோல்டாலுடன் நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், -