பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

遭馨& - மனிதருள் ஒரு தேவன் ஸாரா ! என்ன நடந்தது? ஒரளவுக்கு என்னுல் ஊகிக்க முடிகிறது. என் குடும்பம் என்னவாயிற்று? விவரமாகச் சொல்லேன்...' ' உஷ். இரைந்து பேசாதீர்கள். நீங்கள் சொன்னதுபோல் நான் ஒருத்தித்தான் உயிரோடு தப்பியிருக்கிறேன். பேசிக் கொண்டிருந்தால் யமன் என்னையும் துரத்திக்கொண்டு வந்து விடு வான். வேகமாக வாருங்கள், பாபுஜி கூடையிலிருந்து இன் ைெரு பழத்தை எடுத்துக் கடித்தவாறு வேகமாக நடந்தாள் ளாரா. அதைக் கேட்டதும் என் கால்கள் தொய்ந்தன. எதிர் வீட்டு ஹாகும் சிங்கின் ஒரே மகள் வாரா, அவளைப் போன்ற அழகி அந்த வட்டாரத்திலேயே இல்லை எனலாம். சென்ற தடவை நான் ரஜாவில் கிராமத்துக்குச் சென்றிருந்த போது, பட்டாளத்திலே இந்த வாயாடிக்கேற்ற பையன் யாரா வது இருந்தால் சொல்லேன், கட்டிப்போடலாம் : என்று ஹுகும் சிங் என்னிடம் விளையாட்டாகக் கேட்டது இன்னும் மறக்கவில்லை எனக்கு. அவர் உருவம் கண்முன் நிற்கிறது. ஆளுல்... அவர்தான் இன்று இல்லை, பாலு யார்தான் இருக் கிருர்கள்? என் மனைவி இருக்கிருளா? குழந்தைகள்... ' -மல் ஹோத்ராவின் குரல் கம்மியது: அவர் அனுபவித்த வேதனைக்கு வார்த்தைகளால் ஆறுதல ளிக்க இயலுமா ? . தொண்டையைக் கனத்துக் கொண்டு பேசத் தொடங்கினர், மல்ஹோத்ரா மோராரைக் கடந்து பாஜில்கா போகும் சாலையை அணுகியதும் ஜனசந்தடி தென்பட்டது. தெரு விளக் குகள் பிரகாசமாக ஒளிர்ந்தன. என்னல் மேலும் பொறுமை யோடிருக்க முடியவில்லை. ஸாரா சொல் ! என் மனைவி, குழந்தைகளின் கதி என்னவாயிற்று? உன் தந்தை தப்பிப் பிழைக்கவில்லையா? நாணற் புதரில் எவ்வளவு நாட்களாக ஒளிந்து கொண்டிருக்கிருய்?' என்று கேள்விகளை அடுக்கினேன். ஆபத்தான சூழ்நிலையிலிருந்து வெளியேறி வெகுதூரம் வந்து சேர்ந்த பிறகுதான் ஸாரா பேசினுள்: ' பாபுஜி மெய்யாகவே உயிரோடு தப்பியவள் நான் ஒருத்திதான். ஆண்கள் ஓரிருவர் எங்கேயாவது ஒடி ஒளிந்து கொண்டிருப்பார்களோ என்னவோநிச்சயமாகச் சொல்வதற்கில்லை. நேற்றைக்கு முன் தினம் இரவு பத்துமணி இருக்கும். திடீரென்று சேரிப்பக்கமிருந்து கூக்குரல் கேட்டது. அப்பா கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த் தார். உடனே அவர், ஐயோ! சேரி பற்றிஎரிகிறதே! என்று கத்தினர் கூச்சலும் அவலக் குரல்களும் அதிகரித்தன. குழந்தை களும் பெரியவர்களும் அலறிப்புடைத்துக்கொண்டு தெருவோடு