பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பாலகிருஷ்ணன் 109 ஓடினர். கொலை கொள்ளை! வெறியர்கள் சூரையாடுகிருர்கள் ! ஒடுங்கள் ! தப்பி யோடுங்கள் !’ என்று பல குரல்கள் கேட்டன. சில நிமிடங்களுள் கிராமமே காலியாகிவிட்டது. நாங்கள் தலை தெறிக்க ஓடி ஆற்றங்கரையை அடைந்தபோது, பின்னலிருந்து தீப்பந்தங்களுடனும் தடிக்கம்புகளுடனும் குண்டர்கள் பலர் துரத்தி வருவதையும் நம் தெரு முழுவதும் பற்றி எரிவதையும் ஆற்று மேட்டிலிருந்து பார்க்க முடிந்தது. ஒடவும் தென்பு இல்லே, யாருக்கும். எதிர்க் கரையை அடைந்தால் தப்பிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. எதிர்க்கரையில் சாவு காத்திருக்கிறது என்பது யாருக்குத் தெரியும் ? எப்படித் தெரியும் ? பயங்கரம், பாபுஜி ! இருளில் மரத்தடியில் பதுங்கியிருந்த நூற்றுக்கு மேற்பட்ட ராட்சதர்கள் பளபளக்கும் கத்திகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர். குழந்தைகளும் பெண்மணிகளும் அலறிக் கூக்குரலிட்டது...நினைக்கவே குலை நடுங்குகிறது, பாபுஜி ! உங்கள் மனைவி என்னைப் பின்தொடர்ந்து, குழந்தையைத் தோளில் சாத்தியவாறு ஓடிவந்தார். அம்மா! அம்மா ! என்று அலறியவாறு பின்னல் ஓடிவந்த உங்கள் மகன் சரண்... ஐயோ! அதை எப்படிச் சொல்வேன், பாபுஜி ஒரு முரடன் அவனைப் பிடித்துப் பாலத்தின் மதகில் மோதி ஆற்றில் வீசி எறிந் ததை என் கண்ணுல் பார்த்தேன் ! உங்கள் மனைவியும் பார்த் தாள் ! எங்களால் என்ன செய்ய முடியும், பாபுஜி ! இவர்களிடம் அகப்பட்டு மானமிழந்து சாவதைவிட, ஆற்றில் விழுந்து உயிர் துறப்பதே மேல் என்றுதான் தோன்றியது. எஞ்சியிருந்த தைரி யத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு ஆற்றில் குதித்துவிட்டேன். உயிரை விடுவது நாம் எண்ணுவதுபோல் அவ்வளவு லேசான காரியமன்று என்ற உண்மை அந்த நிமிடம்தான் எனக்கு விளங் கியது. உங்கள் மனைவியும் என் தாயாரும் மதகடியில் ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு, பின்னர் ஒருவாறு துணிந்து ஆற்றில் இறங்கிவிட்டார்கள். சில நிமிடங்கள் தண்ணிரில் திணறித் தத் தளித்து மூழ்கி மூழ்கி எழுந்த அவர்களே வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது! இளமைப் பருவத்தில் நீந்தக் கற்றுக் கொண்டதன் பயனாக, நீரில் மூழ்கி அமிழ்ந்து, கால்களை நீரில் உதைக்காமல் தவளைபோல் கைகளால் அளைந்து கரையை ஒட்டியே வெள்ளத்தோடு மிதந்து வந்தேன். வெகுதூரம் வந்து விட்டேன். பாலத்தின்மீது வெறியாட்டம் ஒய்ந்துவிட்டது. இரத்தம் தோய்ந்த கத்திகளையும் கோடரிகளையும் ஆற்றில் வீசி ஓட்டமெடுத்தனர். அந்தப் பாவிகள்! - கைசளக்கும் வரை நீந்திச் சென்று ஆபத்து இல்லாத இடமா கப் பார்த்துக் கரையேறலாம் என்று தீர்மானித்தேன். உடற் சோர்வும், படுகொலைகளைக் கண்டதால் ஏற்பட்ட மனச்சோர்வும்