பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 மனிதருள் ஒரு தேவன் என்னை நினைவிழக்கச் செய்தன. கரையேறியவுடன் மயங்கி விழுந்த என்னை யாரோ கட்டித் தூக்குவது போலிருந்தது, ஒரு முரட்டுக்கரம் என் தோள்பட்டையைப் பற்றியிருந்தது. போன்ற உணர்வு. அந்த அரைமயக்க நிலையில் எதையும் சரியாக உணர முடியவில்லை என்னல். - மறுநாள், விடிவெள்ளி முளைக்கையில் கண்விழித்தேன். உடம்பு மூட்டுக்கு மூட்டு வலியெடுத்தது. ஆற்றிலிறங்கிக் குளித்த பிறகுதான் ஓரளவுக்கு தென்பு வந்தது. ஆளரவமற்ற அந்த இடத்தைவிட்டு வெளிக் கிளம்பவே துணிச்சல் இல்லை எனக்கு. பொறுக்க முடியாத பசி வேறு. யாராவது தெரிந்த மனிதர்கள், நம்பிக்கைவைக்கத் தக்கவர்கள் கண்ணில் படமாட் டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருந்த போதுதான்... தெய் வம் போல நீங்கள் வந்து சேர்ந்தீர்கள் ! என்று ஸாரா கூறி முடித்தாள். என் உணர்ச்சிகள் எப்படிக் கொந்தளித்திருக்கும் என்று நீங்கள் ஊகிக்க முடியாதா, பாலு ! சற்றைக்கெல்லாம் பஸ் வந்தது. எவ்வளவோ கேள்விகள் சந்தேகங்களை ஸ்ாராவிடம் கேட்க நினைத்தேன். அவளுடைய அப்போதைய நிலையில் எதையும் கேட்பது உசிதமில்லை என்று போசாமலிருந்து விட்டேன். டெல்லி மெயிலைப் பிடித்து, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் ஏறிச் சென்னைவந்து, இதோ இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் ' என்ருர் மல்ஹோத்ரா. எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. சொல்லுக்கு அடங்கக் கூடியதா அவரது சோகமும் வேதனையும்? ' அந்தப் பெண்... அவளேயும் அழைத்துக் கொண்டுதான் வந்திருக்கிறீர் களா ? ' என்றேன். ஆமாம், பாலு அவளுக்கு வேறு உறவினர்கள் யாரு மில்லையே எங்கே போவாள், ஸாரா ? இனி என்னைத் தவிர அவளுக்கு யார் கதி?” சென்னையில் ஒரு ஹோட்டலில் வாட கைக்கு ஓர் அறை எடுத்து, அங்கே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இனிமேல்தான் யோசிக்க வேண்டும், வேறு என்ன ஏற்பாடு செய் யலாம் என்று ' என்று மல்ஹோத்ரா கூறியதும், எங்கள் யூனிட் கமாண்டிங் ஆபீசர் மல்ஹோத்ராவை அழைப்பதாக ஆர்டர்லி ஒருவன் வந்து அழைத்தான். - பத்து நிமிடங்களுக்குப் பின் திரும்பி வந்த மல்ஹோத்ரா, 'பாலு ! உங்களிடமிருந்து ஒரு முக்கியமான உதவியை எதிர் பார்க்கிறேன். வருகிறவாரம் நம் யூனிட் இங்கிருந்து புறப்படு கிறது. நாம் ஜால்ன போகிருேம். சென்னையில் ஒரு வீடு பார்த்து ஸாராவைக் குடிவைக்கலாம் என்று நினைத்த எனக்கு இச் செய்தி பெரிய அதிர்ச்சிதான். இப்போதைக்குச் சில