பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பாலகிருஷ்ணன் 111 மாதங்கள் ஸாராவை உங்கள் வீட்டில் விட்டு வைக்கலாமென நினைக்கிறேன். வேறு வழியே தோன்றவில்லை, பாலு ! உங்கள் பெற்ருேர், மனைவி முதலியவர்கள் சம்மதிப்பார்களா ? செலவைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அதனை நான்தான் ஏற்றுக்கொள்வேன் 1’ என்ருர். நான் அவர் கோரிக்கையை ஏற்காமலிருப்பேன ? அநாதரவான ஒரு பெண்ணை ஆபத்திலிருந்து மீட்டு வந்து அடைக்கலமும் தேடித் தந்து, அவளுக்குத் தம் சொந்தச் செலவி லேயே திருமணமும் செய்விக்க முடிவு செய்த மல்ஹோத்ரா வின் மனிதப் பண்பினை என்னென்று கூறுவது? அதோடு நின்றதா அவரது தியாக உணர்ச்சி...... ? நாங்கள் ஜால்ணுவுக்கு வந்த மூன்ருவது மாதம், மல்ஹோத்ரா சுபேதார் மேஜராகப் பதவி உயர்வு பெற்றுப் புனவுக்கு மாற்ற லாகிச் சென்ருர். அந்தப் புனிதருடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருந்த எனக்கு அவரை விட்டுப் பிரிவது சிரமமாய்த்தான் இருந்தது. ஸாராவின் நற்குணங்களையும் அடக்கத்தையும் சிலாகித்து அவ்வப்போது எனக்கும் மல்ஹோத் ராவுக்கும் என் தந்தை எழுதி வந்தார். விரைவில் லாராவின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி விடை பெற்ருர், மல்ஹோத்ரா. அவர் பூவுைக்குச் சென்ற மறுவாரம் என் மனைவியிடமிருந்து வந்த கடிதம்...... கடிதமா அது? அத்தச் செய்தியை மல்ஹோத் ராவுக்கு எப்படித் தெரியப்படுத்துவது? அடி, பாதகி ? ஸ்ாரா, ஸாரா என்று உன்னிடம் உயிரையே வைத்திருந்தாரே மல் ஹோத்ரா; பெற்ற குழந்தைகளையும் கட்டின மனைவியையும் ஒரே நாளில் இழந்த துயரத்தையும் மறந்து, உன் நல்வாழ்வி ல்ை அமைதிபெற விழைந்த அவருக்கா இப்படி ஒரு பேரிடி! இதை எப்படித் தாங்குவாரோ அவர் ? அவருக்குத் தகவல் தெரிவிக்கும் பொறுப்பினை என் மீது சுமத்திவிட்டார் என் தந்தை. ஸாரா மூன்றுமாத கர்ப்பிணி 1 அடிக்கடி வாந்தி எடுப்பதும் சோர்ந்து படுப்பதுமாக இருந்த அவளே டாக்டரிடம் வரும்படி என் மனைவி அழைத்திருக்கிருள். அவளும் விகல்பமின்றி, டாக்டரிடம் போக இணங்கியிருக்கிருள். டாக்டர் அம்மாள் பரிசோதித்துவிட்டு, என் மனைவியிடம் ஸாராவின் நிலைமையை எடுத்துரைத்திருக்கிருள். உண்மை தெரிந்ததும் ஸாரா தற் கொலை முயற்சி வில் ஈடுபட்டிருக்கிருள். ரயிலில் விழுந்து உயிர் விடத் துணிந்த அவளை எப்படியோ தடுத்துக் காப்பாற்றி விட்டார்கள். இனிமேல் அவளைக் காப்பாற்றுவது சிரமம் என்று கண்டுகொண்ட என் பெற்றேர்கள் என் மூலம் மல்ஹோத்ரா