பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மனிதருள் ஒரு தேவன் வுக்கு உண்மையைத் தெரிவிக்க முடிவு செய்தனர். லாராவின் வாழ்வில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை அவர்களால் ஊகிக்க முடிகிறது; ஆனால் இன்னதென்று விளங்க வில்லை ! எனக்கும் ஒரே குழப்பம்தான். ஸாரா தவறு செய்திருந் தால், டாக்டரிடம் போகச் சிறிதும் தயக்கமின்றி உடனே இணங்கி இருப்பாளா? அவள் நிரபராதியாக இருக்கக்கூடும் என்பதற்கு இந்த ஒரு பலவீனமான ஆதாரம்தானே துணை நிற்கிறது? எப்படியிருந்தால் என்ன? இது மல்ஹோத்ராவின் பிரச்னை அவர் அனுபவிக்கவேண்டிய தலைவலி. புனிதமான மல்ஹோத்ராவின் தியாக உள்ளத்துக்கு இப்படி ஒரு வேதனையா? நடந்ததைச் சுருக்கமாக எழுதிவிட்டேன், மல் ஹோத்ராவுக்கு. பதினைந்து நாட்களுக்குப் பிறகு மல்ஹோத்ராவிடமிருந்து பதில் வந்தது எனக்கு. லாராவை அவர் பூனாவுக்கு அழைத் துச் சென்றுவிட்டாராம். அதுமட்டுமா ? ' ஸாரா குற்ற மற்றவள், பாலு முறைப்படி நான் அவளைத் திருமணம் செய்துகொண்டு விட்டேன். உங்களை நேரில் சந்திக்க அவள் மிகவும் கூசுகிருள் அதனால்தான் தங்களை அழைக்கவில்லை. நாம் நேரில் சந்திக்கும்போது உங்களுக்கு எல்லாம் விளக்க மாகக் கூறுவேன் 1’ என்று அவர் எழுதியிருந்ததை என்னல் நம்பவே முடியவில்லை. ஸாரா மூன்றுமாத கர்ப்பிணி என்று தெரிந்துகொண்ட பின்னும் அவளை மணக்க முன் வந்த மல்ஹோத்ராவைப்பற்றி நினைக்க நினைக்க எனக்கு வியப்பை அடக்க முடியவில்லை. என் மதிப்பில் அவர் மேலும் உயர்ந்துவிட்டார். அதன் பிறகு சில மாதங்கள் வரை அவரிடமிருந்து அவ்வப்போது கடிதங்கள் வரும். நாளடைவில் அதுவும் நின்றுவிட்டது. மல்ஹோத்ரா எங்கே இருக்கிருர் என்பதே எனக்குத் தெரியவில்லை. கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாத செய்தி அது. ராணுவத்தினரின் முகாம் அவ்வப்போது மாறும். அதெல்லாம் ராணுவ ரகசியங் களாயிற்றே ! - இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தற்செயலாக அன்று விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனில் மல்ஹோத்ராவும் நானும் சந்தித்தபோது, ' பாலு என்று ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டார் அவர். - : " சர்தார்ஜி i. ஸாரா செளக்கியமா? -என்ன யறியாம லேயே நான் முதலில் கேட்ட கேள்வி அது.