பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii எழுதித் தந்தும் ஒத்துழைத்த எழுத்தாள அன்பர் களுக்கு என் நன்றி உரித்தாகிறது. இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சில கதைகளை ஏற்கெனவே தங்கள் நூல்கள் மூலம் வெளியிட் டுள்ள பிரசுரகர்த்த அன்பர்களுக்கும் என் நன்றி யைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தந்தத்தைப் போலப் பளிச்சென்றும், சுத்த மாகவும், இந்நூலே அச்சிட்டுத் தந்துள்ள ஐவரி பிரிண்டர்ஸ் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினுலும் தகும். கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்களுக்கு வரும் இந்த நூலிலுள்ள ஐம்பது சிறு கதைகளையும் ஊன்றிப் படித்து, அலசி ஆராய்ந்து, திறனய்வுப் பாணியில் சிரிய முன்னுரை ஒன்று வழங்கியிருக்கும் தமிழ் நாட்டின் முந்நாள் முதலமைச்சரும், காந்தி நினைவு நிதியின் தலைவருமான உயர்திரு. எம். பக்தவத்சலம் அவர்களுக்கு என் சார்பிலும், இந்தத் தொகுப்பில் பங்கு கொண்டுள்ள சிறு கதை ஆசிரியர்களின் சார்பிலும் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன். - இந்நூல் வெளிவருவதற்கு ஒரு வகையில் காரண மாக இருந்த திரு. தி. ஜ. ர. இந்தத் தொகுதிக்கு ஒரு சிறுகதை எழுதித்தர இயலாமல் போனதனல் ஏற்பட்ட என்னுடைய ஏமாற்றத்தை வாசகர் களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு கணத்தில் தோன்றிய கருத்தேயானுலும், அதற்கு ஒரு நிலையான இலக்கிய வடிவம் ஏற்பட உறுதுணையாக இருந்து ஊக்கிய மகாத்மாஜியின் அன்பு நினைவுக்கும், எல்லையற்ற கருணைக் கடலான இறைவனின் அருள் கொடைக்கும் மனம்-மொழி. மெய்களால் அஞ்சலி செலுத்துகிறேன். 0-606, அசோக் நகர்). - 资>, சென்னே-33, l கே. ஆர். கல்யாணராமன 8–3–69 ) * மகரம்"