பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. பாலகிருஷ்ணன் i 13 பாலு ! அன்று நான் கடிதத்தில் எழுதாத, எழுத முடியாத ரகசியத்தை இப்போது சொல்ல விரும்புகிறேன். ஸாரா தவறு ஏதும் செய்யவில்லை. தவறு இழைக்கப்பட்டாள். அவள் நிலைமையை உணர்ந்தும் அவளை உன் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று நான் மணந்து கொண்டபோது, என்னையே கூட நீங்கள் சந்தேகித்திருக்கலாம்... ராம் : ராம் ! ஸர்தார்ஜி என்ன இது ? என்னைப்பார்த்தா இப்படிக் கேட்கிறீர்கள்... ? ? என்று குறுக்கிட்டுக் கத்தினேன். பாலு இப்படி ஒரு சந்தேகம் இயல்பாக ஏற்படக் கூடியது என்பதற்காகக் கூறினேன். அன்று என் கிராமத்தில் நிகழ்ந்த கலவரங்கள் பற்றிக் கூறும்போது ஸாரா ஆற்றில் குதித்துக் கரையேறினுள் என்று கூறியது நினைவிருக்கிறதா ? ’’ ஆமாம்; அந்தத் துயர நினைவு இப்போது எதற்கு ?’’ ‘’ கேளுங்கள், புரியும். கரையேறியதும் ஒரு முரட்டுக் கரம் தன் தோள்களைப் பற்றியது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக ஸாரா கூறினளே - அப்போது நிகழ்ந்த இழிச் செயல்தான் இதற்கெல்லாம் காரணம். அவள் உங்கள் வீட்டி லிருக்கையில் தற்கொலை செய்துகொள்ள முயன்றதன் காரண மும் இதுதான். நினைவிழந்து கிடந்த நிலையிலே .. லாராவை நிலைகுலையச் செய்துவிட்டான் அந்தப் பாதகன் அவளுக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டான் ! உங்கள் டாக்டர் கூறிய போது தான் அவளுக்கு முழு உண்மையும் விளங்கியிருக்கிறது. அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் ' என்ற ஒரு ஊகந்தான் கடைசிவரை அவளுக்கு......' " அப்படியென்ருல்... ஸாரா இப்போது...? ' பிரசவித்து இறந்துவிட்டாள். குழந்தை வயிற்றிலேயே மரித்து விட்டது. அவமானச் சின்னமாக இந்த உலகில் வளையவர விரும்பவில்லை, அது ! நான் மட்டும் ஏன் உயிரோடிருக் கிறேன்... ? ' என்று ஒரு பகல் முழுவதும் புலம்பிவிட்டு ஸாரா இறுதி விடை பெற்ருள்...” மல்ஹோத்ரா ஒரு பெருமூச்சு விட்டார். -

  • பாவம் !

எனக்காகவா அனுதாபப்படுகிறீர்கள்? 3 * ஸாராவுக்காகவுந்தான்.' «Бт~8.