பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 மனிதருள் ஒரு தேவன் அந்த நிலையில் அவளே எந்த வாலிபன் மணக்க முன் வருவான், பாலு ? ஒரு தந்தையின் அல்லது அண்ணனின் ஸ்தானத்திலிருந்து, அவளுக்குத் தக்க கணவனைத் தேடிக் கல்யாணம் செய்து வைக்கத்தான் விரும்பினேன். உங்கள் கடிதம் வந்த பிறகு என் கடமை எனக்குப் புரிந்துவிட்டது. அதாவது, நானே அவளை மணப்பது தான் அவளுக்கு வாழ்வளிக் கும் ஒரே வழி என்று புரிந்துகொண்டேன். நான் அவளை மனைவி யாக ஏற்றுக்கொண்டது முதல், அவள் என்னிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசியதே இல்லை, பாலு என் மனம் அவளுக்கு விளங்காமலில்லை. ஆனால், அவளது இதயத்தில் குடிகொண்டி ருந்த வேதனையும் வெட்கமும். அவள் உயிரோடுதான் அவையும் வெளிப்பட்டன... உம், வாருங்கள் ! பாலு தேநீர் பருகலாம் ! ' என்று என் தோள்மீது வலக்கரத்தைப் போட்டு உந்தித் தள்ளி ஞர், மல்ஹோத்ரா. மல்ஹோத்ரா ஒரு மகாத்மா என்று நான் முதலிலேயே கூறி யிருந்தால், அதை யார் ஒப்புக் கொண்டிருப்பார்கள் ? உலகில் இரு மகாத்மாக்களுக்கு இடமுண்டா, என்று தான் கேட்கத் தோன்றும். மல்ஹோத்ரா மனமுவந்து செய்தது போன்ற மகா தியாகத்தைச் செய்யும்படி காந்தியடிகள் மக்களுக்கு எடுத் துரைத்தபோது, சொல்வது எளிது செயல் கடினம் 1’ என்று முணுமுணுத்தவர்கள் பலர். மகாத்மாஜியின் சொல்லைச் செய லாக்கி வாழ்ந்து காண்பித்த உத்தமர் மல்ஹோத்ராவின் புனித நினைவு எழும்போதெல்லாம் அவரை ஒரு மகாத்மாவாகத்தான் நான் மதிக்கிறேன். மனிதருள் ஒரு தேவன், அவர் 1