பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. எஸ். ஜம்புநாதன் 13 நெருப்பு நிஞ்சுண்டராவ் அவசரம் அவசரமாக என்னிடம் ஓடிவந்தார். அவருடைய முகத்திலிருந்த பரபரப்பைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று நான் பயந்துபோய் விட்டேன். ' என்ன ராயரே, விசேஷம் ? ’ என்று கேட்டேன். ' ரொம்ப அவசரம், அஞ்சு ரூபாய் கைமாத்து வேணும் என்ருர் ராவ். என்னிடம் பணம் இருந்தது. இரண்டொரு நாட்களுக்குக் கைமாத்தாகக் கொடுத்துப் புரட்டக்கூடிய பணம் அது. வாரா வாரம் படியரிசி வாங்கப் பணம் ஒதுக்கிவைக்க வேண்டியிருக் கிறதே இல்லை என்று சொல்லவும் மனம் இல்லை; கொடுக்கக் கூடிய வசதியும் இல்லை. அடுத்த மாசம் சம்பளம் வாங்கித்தான் நஞ்சுண்டராவ் கொடுப்பார். என்னய்யா, அத்தனை அவசரம்? ரேஷன் வாங்கக்கூட இன்றுதானே திங்கட்கிழமை? என்று மழுப்பினேன். ரேஷன, சனிக்கிழமைக்குச் சனிக்கிழமை தானே, ஐயா நமக்கு ரேஷன் பிரச்னை இன்று ஊரிலிருந்து சில சிநேகிதர்கள் வந்திருக்கிருர்கள். அவர்களே அழைத்துக்கொண்டு சினிமாவுக் குப் போகவேண்டும் ' என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். சினிமாவுக்கா? என்னிடம் பணம் இல்லை ஐயா, கடன் வாங்கியாவது நண்பர்களைக் குவிப்படுத்த வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்?’ என்றேன் வெடுக்கென்று. - - - - - -