பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il 6 நெருப்பு பார்த்தேளா ! தங்களிடம் நிஜத்தை சொல்லி இருக்கப் படாது. ரேஷன் வாங்கவேண்டும் என்று கேட்டால் கொடுத் திருப்பீர் ஆபீசில் கூட, தலைவலி என்று லீவு கேட்டால் கொடுத்து விடுகிருன். நண்பர்கள் வந்திருக்கிரு.ர்கள், லீவு வேண்டும் என்று கேட்டேன் 1 வருஷாந்திரக் கணக்குப் பாக்கி யிருக்கிறது, இப்போது லீவு கிடையாது என்று மானேஜர் முறைத்துவிட்டான். நண்பர்களுக்கு நாம் எவ்வளவு கடமைப் பட்டிருக்கிருேம் என்பதை அவன் கண்டான ? நம்மால் பொய் பேசவும் முடியவில்லை ' என்று அலுத்துக்கொண்டார் அவர். லீவு கிடைத்துவிட்டதோ இல்லையோ? ' என்று கேட்டேன். கிடைத்தது. நிஜத்தைச் சொன்னதுக்காக கிடைத்த பலன், மூணுநாள் சம்பளமில்லாத லீவு. தலைவலி ஜூரம் என்று சொல்லி டபாய்த்திருக்கலாம். ’’ ஏன் ஐயா, நண்பர்களை உபசரிப்பது பிரயோசனமான காரியம்தானே? அவர்களுடைய ஊருக்கு நீர் போனல் எப்படி உபசாரம் செய்கிரு.ர்கள் ? ' என்று இடைமறித்தேன் நான். பிரயோசனம்தான்; ஆளுல் பொய்யைச் சொல்லி ...' பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை, ஐயா, சத்தியம் பேச வேண்டியது தான். அப்பட்டமாகப் பேசக்கூடாது. சத்தி யம் என்பது நெருப்பு, தொட்டால் சுடும், நெருப்பு. அதற்காக நாம் ஒதுக்கி விடுகிருேமா? நெருப்பின் சக்தியை நாம் உபயோ கிக்க வில்லையா ?’’ 'உம்முடைய வேதாந்தம் இருக்கட்டும், இங்கிதம் தெரிந்த மனுஷர் நீர் என்று உம்மிடம் வந்தேன். நீரோ கதை பேச ஆரம்பித்து விட்டீர் ' என்ருர் ராயர். நஞ்சுண்டராவ் நல்ல மனிதர். வெகுளி, சத்தியவாதி. ஆல்ை பிறர் அவருக்குச் சூட்டுவது அசட்டுப் பட்டம்தான். ராயரே, காலத்துக்குத் தக்கவாறு நடந்துக்கணும். உமக்குப் பணம் கொடுக்க ஆசைதான், ஆல்ை...' 'உம்முடைய சால்சாப்பு எனக்கு வேண்டாம். பணம் இருந்தால் எடும் வெளியே ' என்று அழுத்தமாகக் கேட்டார் அவர். " இதனால்தான் நீர் எங்கே போனலும் கெட்ட பெயர் வாங்குகிறீர். இது என்ன ஊதாரித்தனம், ஐயா? கடன் வாங்கி யாவது சினிமா பார்த்துச் சந்தோஷப்பட வேண்டும் என்று என்ன நியாயம் ! "