பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நெருப்பு நோட்டா... என்ற சந்தேகம் எழுந்துவிட்டது, அவருக்கு. பையில் கிடந்த பணத்தைக் துழாவிப் பார்த்தார். நிதானப்பட வில்லை. நான் ஒருவேளை கவனித்தேனே என்று என்னையும் பார்த் தார். ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்தாற் போலத்தான் எனக்கும் தோன்றிற்று. நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. என்னுடைய சாட்சியினல் எவருக்கு நஷ்டம் ஏற்படும் என்று சொல்ல முடியாத நிலையில் நான் சேட்ஜியின் சந்தேகத்தை நிவர்த்திசெய்ய முடியாமல் தெருவில் இறங்கினேன். இதற்குள் அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார். என்ன ஸார், ஐந்து ரூபாய்தான் கொடுத்தேன், இவ்வளவு சில்லறை தருகிறீர் களே ? என்று கேட்டார் கடைக்காரரைப் பார்த்து. பார்த் தீர்களா, என்னவோ ஞாபகம்’ என்று அவர் அசட்டுச் சிரிப்புடன் ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து பெட்டிக்குள் போட்டுக் கொண் t—ff T. சேட்ஜி பாக்கிச் சில்லறையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினர். ' ஆனலும் இவ்வளவு மறதி கூடாது. நான் எடுத் துக் கொண்டிருந்தால் அவருக்கு ஐந்துரூபாய் நஷ்டமாயிருக் கும் ' என்ருர் என்னிடம். தம்முடைய நேர்மையிலே அவருக்கு அத்தனை பெருமை. ஒரு வேளை நீங்கள் மறந்து கொடுத்திருக்கலாம் அல்லவா ? என்ற சந்தேகத்தைக் கிளப்பினேன் நான். புருவத்தைச் சுருக்கி நிமிர்த்தினர் சேட்ஜி. இருக்கலாம்; ஆனல் எப்போதும் சந்தேகத்தின் பலனை எதிராளிக்குத்தான் கொடுக்க வேண்டும். அதுதான் அஹிம்லா தர்மம்..கோர்ட் டிலே கூட... ' - நான் கடகடவென்று சிரித்துவிட்டேன். வெற்றிலை போட்டுக் கொள்ளலாமா ? ' என்று பக்கத்திலிருந்த கடை வாச லுக்கு சென்ருர் சேட்ஜி. கடைக்காரனிடம் கால்ரூபாயை நீட்டி வெற்றிலை பாக்குக் கேட்டார். நானும் கடையை நெருங்கி நின்றேன். கடைக்காரன் இரண்டு பேருக்கும் பாக்குக் கொடுத் தான். இதன் நடுவே வெற்றிலைத் தட்டில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு ஒருவன் சிகரெட் வேண்டும் என்ருன். கடைக் காரன் அவனுக்கு சிகரெட் எடுத்துக் கொடுத்தான். அப்புறம் யார் யாரோ வியாபாரம் செய்தார்கள். வாயிலிருந்த பாக்கும் கரைந்து விட்டது. ' என்ன அப்பா, வெற்றிலை கொடேன்?’’ என்று கேட்டேன் நான். - - - கடைக்காரன் இரண்டு பேருக்கும் வெற்றிலை கொடுத் தான். தட்டில் கிடந்த பத்துப் பைசாவை எடுத்துப் பெட்டி யில் போட்டு விட்டு மற்றவர்களைக் கவனிக்க முற்பட்டான்.