பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. எஸ். ஜம்புநாதன் 1 # 9 வெற்றிலையைப் போட்டுக் கொண்டே, சேட்ஜி பாக்கி எங்கே ? ' என்று கையை நீட்டினர். கடைக்காரன் அவரை வெறித்துப் பார்த்தான். ஐந்து பைசா வெற்றிலை, ஐந்து பைசா பாக்கு, சரியாப் போச்சே? ' என்ருன் நிதானமாக. சரியாப் போச்சா ? உன் கணக்குப்படி பத்துப் பைசா போனலும், மிச்சம் பதினைந்து பைசா எங்கே ? என்ருர் சேட்ஜி. பத்துப் பைசாதானே ஐயா கொடுத்தீர் ' என்ருன் கடைக்காரன். இந்தத் தட்டிலேதானே இத்தனை நாழி கிடந்தது ? ' என்ருன் மறுபடியும். இல்லை. நான் கால் ரூபாய் உன்னுடைய கையில் கொடுத்தேன். பெட்டியில் போட்டுக் கொண்டாய், பாரு. இந்த பத்துப் பைசா, சிகரெட் வாங்கியவர் கொடுத்தது.' பெட்டியிலே உம்முடைய கால் ரூபாய்தான கிடக்கும் ? வேறு கால் ரூபாயே இருக்காதோ ? நன்ருய் ஞாபகப் படுத் திக்கிங்க, ஸார். பத்துப் பைசா கொடுத்துட்டு இப்படி...' இந்தாப்பா, உன்னிடம் பொய் பேசி லாபம் சம்பாதிக்க வேண்டாம். நான் கால் ரூபாய் தான் கொடுத்தேன். மிச்சம் பதினைந்து பைசா கொடு." ' என்ன ஸார், மிரட்டிக் கேட்டா ஏமாந்துடுவேன ? பத்துப் பைசாதான் கொடுத்தீங்க, உங்களுக்கு வெத்திலே பாக்குக் கொடுத்தப்புரம் தான் அந்தக் காசைக்கூட தட்டி விருந்து எடுத்துப் பெட்டியிலே போட்டேன்.' ' என்ன அப்பா, கால் ரூபாய் கொடுத்தார். நீ வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டாயே! ஒரேயடியாகப் பேசி ல்ை ' என்று ஆத்திரம் தொனிக்கக் கேட்டேன் நான். ' கொடுத்திருக்கலாம் ஸார், கொடுக்கிற காசைக் கவனிக் காமல் வாங்கிப் பெட்டியிலே போட்டுக் கொண்டிருந்தால் நான் வியாபாரம் செய்ய முடியுமா ?' என்ருன் அமைதியாக: " நீங்கள் சொல்லுங்கள் சாட்சி. ஆலுைம் வாங்கிய காசு எனக்கு ஞாபகம் இருக்கிறது ' என்ருன் அவன். பத்துப் பதினைந்து நிமிஷம் தகராறு நடந்ததுதான் மிச்சம். அவன் பாக்கியைக் கொடுக்கவில்லை. பத்துப் பைசாக் கொடுத்ததாகவே சாதித்தான். சேட்ஜிக்குக் கோபம் வந்து விட்டது. இந்தாப்பா, நீ பாக்கி கொடுக்க வேண்டாம் ; எதிராளியை மட்டும் முட்டாள் என்று எண்ணிவிடாதே. நான்