பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 20 நெருப்பு கொடுத்தது கால் ரூபாய் தான். பாக்கி தராவிட்டாலும், ஞாபகப் படுத்தியாவது பார் ' என்ருர் படபடப்புடன், ' ஞாபகப் படுத்திக் கொண்டு தான் ஸார் சொல்லுகிறேன் ; நகருங்கள்; அவைசியமாகக் கும்பல் சேருகிறது. ’’ ' அப்போ நான் பதினைந்து பைசா நஷ்டப்பட வேண்டு மாக்கும் ?’’ ' கொடுத்தால்தானே ஸார், நஷ்டப்பட ? என்ருன் அலட்சியமாக. - எனக்குக் கோபம் வந்துவிட்டது. சேட்ஜி, வாருங்கள் போகலாம். பதினைந்து பைசா தானே ? வாருங்கள் என் றேன். 'கடைசியாகக் கேட்கிறேன், அப்பா. நன்கு ஞாபகப்படுத்திப் பார். நான் கால் ரூபாய் கொடுத்தேன்; பாக்குக் கொடுத்தாய், நடுவில் யாரோ சிகரெட் கேட்டார்கள் மிகவும் நிதான மாகவே சேட்ஜி பேசினர். - ' ஸார், இந்தக் கதை யெல்லாம் வேண்டாம், நீங்க பத்துப் பைசாத்தான் கொடுத்திங்க. ' சேட்ஜி, வாங்க' என்றேன் நான். கடைக்காரனுடன் வாதம் செய்து கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. கடையை விட்டுக் கீழே இறங்கிளுேம். ஒருத்தரு காந்தி : மத்தவரு அவருக்கு சீடப்பிள்ளை என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி நான் வெறுப்புடன் திரும்பினேன். கதர் வேறே போட்டுக் கிட்டாங்க. பத்துப் பைசா வியாபா ரத்திலே அசந்தாப் போயிடும் போல இருக்கு ' என்று கடைக் காரன் முணுமுணுத்தான். அவனுடைய கன்னத்தில் ஓர் அறை விட்டு விடலாமா என்ற ஆத்திரம் எனக்கு. சேட்ஜி என் கையைப் பிடித்து நிறுத்தினர். நான் இருக்கும் ஆவேச நிலை யைக் கவனித்து. கடைக்காரன் கவனிக்காமலே இருக்கலாம். நாம் தான் லார், சாமான் வாங்கிக் கொண்டு காசைக் கொடுக்கவேண் டும். எத்தனையோ ஞாபகம் அவர்களுக்கு ' என்ருர் ஒருவர். சேட்ஜி பதில் பேசவில்லை. அதற்குள் அந்த நண்பர் சேட்ஜி பழைய காங்கிரஸ்காரர் : பொய் பேசமாட்டார் நீ