பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 நெருப்பு பாவம் அவர் அப்பாவி மனுஷர், அசந்தர்ப்பமாகக் கூட பொய் பேச மாட்டார். அவருடைய முகத்தைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனலும் நான் என்ன சொல் வது ? ' மணி இரண்டடித்து விட்டதே. இன்று எடுத்துக்கொண்ட லீவு வீணுகிவிடும் போல தான் இருக்கிறது. வராத நண்பர்கள் வந்து விட்டார்கள். என் சோதனைக் காலம் ' என்று அலுத் துக் கொண்டார் ராயர். பேசாமல் உள்ளே எழுந்து சென்றேன். போகும் போதே ஒரக்கண்ணுல் நஞ்சுண்ட ராவைக் கவனித்தேன். நான் எழுந்து போவதைக் கண்டு அவர் ஏமாந்து விடுவார் என்ற நினைப்பு எனக்கு. அவரோ பிரகாசமான முகத்துடன் எழுந்து நின்ருர், உள்ளே சென்று ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து வந்து அவரி டம் கொடுத்தேன். தாங்க்ஸ் ' என்று கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொண்டார் அந்த அப்பாவி. - நானும் ஒர் அப்பாவி தான் என்று சமாதானம் செய்து கொண்டேன். -