பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர ரகுநாதன் |4 இழி தொழில் கடுகு பொரிந்து அடங்குவதுபோல் கைதட்டல் கலகலத்து ஒய்ந்தது. நகர காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசியும், ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரும், நகரசபைத் தலைவரும், பிரபல மொத்த ஜவுளி வியாபாரியும், முன்னாள் நீதிக் கட்சிப் பிரமுகரும், இந் நாள் சிவனடியார் திருச்சபையின் போஷகருமான திருவாளர் தில்லைத்தாண்டவராய பிள்ளையவர்கள் பெருமிதத்தோடு எழுந் திருந்து தொண்டையை லேசாகக் கனைத்துச் செருமிக்கொண்டு திருவாய் மலரத் தொடங்கினர். தேச பக்தத் தியாகிகளே, ஊழியர்களே ! இன்றைய அவ சரக் கூட்டத்தின் காரணம் தங்களுக்குத் தெரிந்ததே. நமது நகரத்தின் தோட்டித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைப் பற்றி ஆலோசிக்கவே நாம் கூடியிருக்கிருேம். நமக்குள்ள செல்வாக்கையும் பலத்தை யும் கண்டு பொருமை கொண்டுள்ள எதிர்க் கட்சிக்காரர்கள் தாம் இந்த வேலை நிறுத்தத்தைத் துண்டிவிட்டு நமக்கும் பொது மக்களுக்கும் பெருங்கஸ்டத்தை உண்டுபண்ணியிருக்கிருர் கள். தொழிலாளரின் கோரிக்கைகள் நியாயமானவையாயிருந் தால் அரிஜன சேவையில் தலை சிறந்த நாம் அவற்றை உடனே ஏற்று ஆவன செய்யப் பின் வாங்கமாட்டோம். ஆனல் அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் அநியாயமானவை. எனவேதான் துர்ப்போதனையால் கெட்டுச் சீரழியும் தோட்டித் தொழிலாள ருக்கும் அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் எதிர்க் கட்சியாளருக்கும் நாம் சரியான பாடம் கற்பித்தாக வேண்டி யிருக்கிறது. நமது அரும் பெருந் தலைவரான மகான் மகாத்மா