பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இழி தொழில் காந்திஜி அவர்கள் தாம் ஒரு பதவியை ஏற்க நேர்ந்தால் ஒரு நகர சபைக் கவுன்சிலர் பதவியையே ஏற்பேன் என்று கூறியுள்ளார். ஏன் தெரியுமா? நகரத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதே கவுன்சில ரின் முக்கிய வேலை என்பதே அதன் பொருள். அதுமட்டுமல்ல. அவர் தமது நிர்மாணத் திட்டத்திலும் நகர சுத்தியை ஒரு பிரதான கருமமாகச் சுட்டிக் காட்டியிருக்கிரு.ர். நாம்தான் துரதிருஷ்ட வசமாக அவரது பொன் மொழிகளையெல்லாம் மறந்துவிட்டோம். காந்தியடிகளின் போதனையை நாம் நடைமுறையில் கடைப் பிடிக்க, இந்தத் தோட்டித் தொழிலாளரின் வேலைநிறுத்தம் நல்ல சந்தர்ப்பத்தைத் தேடித் தந்திருக்கிறது. இதை நாம் நழுவவிடக்கூடாது. தோட்டித் தொழிலை இழிவானதென்ருே, கேவலமானதென்ருே நாம் கருதக்கூடாது. எந்தத் தொழி லுமே உலகில் இழிவானதல்ல. இதை நாம் நன்குணர்ந்து, பொதுமக்களின் கஷ்டத்தையும், காந்தியடிகளின் உபதேசத்தை யும் கருத்தில் கொண்டு, நாமே இந்த நகரத்தைச் சுத்தி செய்ய வேண்டும். நாளைக் காலையிலேயே இந்தப் புனிதமான பணியை, பொதுஜன நன்மைக்கான போராட்டத்தை, நாம் தொடங்கி யாக வேண்டும். போராட்டத்தில் நாம் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்...... ' சொல்லின் செல்வரான தில்லைத் தாண்டவராயரின் தர்க்க நியாயம் நிறைந்த அறைகூவலைக் கேட்டு வந்திருந்தவர்களில் பலரும் தவிர்க்க முடியாத சேவா வைராக்கிய உணர்ச்சி வசப்பட் டுத் தத்தளித்தார்கள். பல ஊழியர்கள் அந்த இடத்திலேயே தமது பெயரைப் பதிவு செய்துகொள்ள முன் வந்தனர். வேறு சிலர் பின்னர் வந்து பதிவு செய்து கொள்வதாகக் கூறித் தப்பித்துக்கொண்டார்கள். செயலுள்ள வியாபாரிகளான உள்ளுர்க் காங்கிரஸ் பிரமுகர்கள் தாம் போராட்டத்தில் நேரடியாகப் பங்குகொள்ள இயலாவிட்டாலும், போராட்டத் துக்குத் தமது ஆத்மீக ஆதரவும் ஒத்துழைப்பும் பரிபூரண மாக உண்டு என்ற ஒளிவு மறைவற்ற உண்மையைத் தெரி வித்து மகிழ்ந்துகொண்டார்கள். அத்துடன் போராட்ட வீரர் களுக்குப் புதிய வாளிகளும், விளக்குமாறுகளும், அகப்பை களும், இலவசமாக சப்ளை செய்யும் தளவாட தான கைங்கரி யப் பொறுப்பையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள். நகரசபைத் தலைவருக்குப் பரம திருப்தி, காந்தியடிகளின் மீது ஆணையிட்டு, எல்லோரும் கடமையை நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று இறுதியாகக் கேட்டுக் கொண்டார்: .கல்ேந்தது فسانه