பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர ரகுநாதன் 125 காரியாலயத்தை விட்டு வெளியே வந்த ஊழியர்கள் பலர் அந்தப் புனிதப் போராட்டத்தைப் பற்றிய தமது கருத்துக் களைப் பரிமாறிக் கொண்டார்கள். " சேர்மன் ஐயாவின் தேச பக்தியைப் பார்த்தீங்களா? அவரைப்பத்தி என்னென்னமோ சொன்னிங்களே !' எல்லாம் அவர் மானத்தைக் காப்பாத்திக்கிறதுக்குத் தானே !’’ ' அட சரித்தாம் யா! தேனெழுகப் பேசினமட்டும் போதுமா ? எலெக்சன் டயத்திலே அவர் பண்ணின அட்டகாச மும் தில்லுமில்லும் நமக்குத் தெரியாதா? இதுவும் அந்த மாதிரி ஒண்ணுதான். " இதிலென்னய்யா தில்லுமில்லு ?” பின்னே ? தோட்டித் தொழிலாளியின் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறதிலே நமக்கு வேறே பங்கா ?” ‘' அதுக்காக, அந்தப் பயலுஹ ஊரை நாறவிடலா மாக்கும் !’’ ' நகர சபைக்குள்ளே இருக்கிற நாத்தத்தை விடவா?’’ அது சரிதான் வே. அவனுக ஊரை நாறவிட்ட பிறகு தானே உமக்கும் நமக்கும் அவனைப்பத்தியே நினைப்பு வருது ? இல்லேன்ன வருமா ? ஹரிஜன சேவை, சேவை என்கிருேமே, ஒரு வாரத்துக்கு மின்னே வரையிலும் அவங்க நிலைமை என்னங் கிறதைப்பத்தி, நாம யாராவது கவலைப்பட்டதுண்டா ? தெரிஞ்சிக்கிட்டதுண்டா ?” வேய், இப்போ ஊர் நன்மையும், காங்கிரஸின் கொரவ மும் தான் பெரிசு. நாளைக்கு நாம் இதிலே கலந்துக் கிடத்தான் வேணும் !’’ " அதென்னமோ, ஐயா. நான் புள்ளை குட்டிக்காரன். அந்தப் பல லுஹ வாயெரிஞ்சி வயிறெரிஞ்சி வாரித் தூத்தின, அந்தப் பாவம் நம்மை லேசிலே விடாது. நான் இந்த விவகா ரத்திலே தலைகுடுக்கப் போறதில்லை.” நீர் வரலைன்ன, வேலை நின்னுடப் போறதாக்கும்!” " இல்லை-நீங்க செய்ற வேலையைத்தான் ஊர் மெச்சப் போவுது !' - ......அந்த ஊழியர்களிடையே நிலவிய அபிப்பிராய பேதங் கள் முடிவேயில்லாத வாதப் பிரதிவாதங்களாக மாறி, கூச்ச லாகப் பரிணமித்து, பதில் காணமுடியாது தவித்தன;