பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இழி தொழில் 2 இன்ருேடு ஏழு நாட்கள் ஆகின்றன. நகரசுத்தித் தொழிலாளரின் வேலை நிறுத்தம் இன்றும் முடிவு காணும் நிலையிலில்லை. நகரசபை நிர்வாகிகளும் தொழி லாளரின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. தொழிலாளர்களும் வணங்கிவிடவில்லை. எனவே வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏழு நாட்கள் ! நகரத்தின் நிலைமையோ சொல்லும் தரமன்று. வீடுகளில் சுத்தம் செய்ய ஆள் கிடையாது. ஊர்ச்சாக்கடைகள் அனைத் தும் கட்டுக்கிடையாகித் தேங்கிப் பெருகிப் பெருகி அணை கடந்து தெருக்களிலே போக்கிடம் தேடத்தொடங்கின. தெருக் கள் அனைத்தும் குப்பையும் கூளமும் மண்டிக் கிடந்தன. எங்கும் துர்நாற்றம் பரவி நின்றது. ஜனங்கள் மூச்சுவிடத் திணறி ஞர்கள் ; சாப்பிடத் திணறினர்கள் ; நடக்கத் திணறினர்கள். நகரம் நரகமாயிற்று.

  • இந்தத் தோட்டிப்பய சென்மங்களுக்கு வந்த திமிரைப் பார்த்திங்களா ?’ என்று கறுவினர்கள் சிலர்.

' அவன் மட்டும் மனுசனில்லையா? அவனுக்கும் வாயும் வயிறும் இல்லாமலா போச்சி!” என்று அனுதாபப்பட்டார்கள் வேறு சிலர், இந்தப் பாச்சாவெல்லாம் நம்ம சேர்மன் பிள்ளைவாளிடம் பலிக்காது என்று ஜம்பம் பேசினர்கள் சிலர். எந்தப் பூச்சாண்டியும் தொழிலாளியிடம் பலிக்காது : ' என்று எதிரொலி கிளப்பினர்கள் வேறு சிலர். வேலை நிறுத்தத்தைப்பற்றி ஜனங்கள் பல்வேறு விதமாகப் பேசிக்கொண்டபோதிலும், அந்த வேலை நிறுத்தம் சகல மக்களின் கவனத்தையும் கவர்ந்திருந்தது என்பதில் மட்டும் எந்தவித அபிப்பிராய பேதத்துக்கும் இடமில்லை. - திருவாளர் தில்லைத் தாண்டவராயன் சொல்கிறபடி அந்த வேலே நிறுத்தம் தூண்டுதலால் ஏற்பட்டதுதான். ஆனல் தூண்டிவிட்டது எதிர்க் கட்சிக்காரர்களோ, பொருமைக்காரர் களோ, அல்ல. தூண்டிவிட்டது, அந்தத் தொழிலாளிகளின் துயரம், பசி, பட்டினி, மிருக வாழ்க்கை, வறுமைக் கொடும்ை. முதலியவைதாம்...... - நகரசுத்தித் தொழிலாளரின் வாழ்க்கை நிலை அவ்வளவு படுமோசமான நிலைமையிலிருந்தது. அவர்களுக்கு நல்ல குடி