பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர ரகுநாதன் 127 யிருப்புக் கிடையாது. ஊர் எல்லையிலுள்ள நத்தம் புறம் போக்கு நிலத்தில் கோழிக்கூடுகளைப் போலவுள்ள குடிசைகள் தாம் அவர்களின் வாசஸ்தலங்கள். அங்குள்ள பன்றிகளோடும் நாய்களோடும் அவர்களும் அந்தக் கூடுகளில் வாழ்ந்தார்கள். அந்தக் குடியிருப்புக்குத் தண்ணிர் வசதி கிடையாது; விளக்கு வசதி கிடையாது. குடியிருப்புக்குப் பின்புறம் ஒடும் வயற் காட்டுச் சிற்ருேடைதான் அவர்களின் அமுத கங்கை ; நிலவின் கருணையுள்ள நாட்கள் தான் அந்தக் குடியிருப்பு ஒளிபெறும் நாட்கள். அந்தக் கோழிக் கூடுகளில்தான் அவர்கள் பிறந்தார் கள் ; வளர்ந்தார்கள் ; காதலித்தார்கள் : கலியாணம் செய்தார் கள் ; பிரசவித்தார்கள் ; பிள்ளை பெற்ருர்கள் ; பேரன் பேத்தி எடுத்தார்கள் ; செத்துப்பிணமானர்கள். அந்தத் தொழிலாளி களுக்குக் கிடைத்துவந்த சம்பளமோ மாசம் பதினைந்து ரூபாய். பஞ்சப்படி உண்டு. அந்தப் படியோ பஞ்சப்படி என்ற பெயருக்கே இலக்கணமாய் அமைந்திருந்தது. இந்தக் குபேர” சம்பளத்தில் தான் அவர்கள் உயிர் சுமந்து திரிந்தார்கள். வருகிற சம்பளம் வயிற்றுக்குக் காணுமல் தவணைவட்டிக் காரனிடம் கடன் வாங்கினர்கள். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் வட்டிக்காரனிடம் அவஸ்தைப் பட்டார்கள் : அடிபட்டார்கள். சட்டிபானைகளைப் பறி கொடுத்தார்கள், மானம் மரியாதையைப் பறிகொடுத்தார்கள். அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிக்கு நகரசபை எந்தவித முயற்சியும் செய்யவில்லை. லோக்கல் போர்டு சிப்பந்தி கள் என்ற பெத்தப் பெயரே தவிர, அவர்களுக்கு வேலை நிரந்தர உத்தரவாதமோ, பாதுகாப்பு நிதி வசதியோ, சம்பள உயர்வோ எதுவும் கிடையாது. எனவே இந்த நிலையில் நகரசபை உத்தி யோகஸ்தர்களுக்கு அவ்வப்போது எழும் விருப்பு வெறுப்புக் களுக்காளாகி, சிலருக்குச் சீட்டுக் கிழிவதும் உண்டு. நகர சபையினர் அவர்களுக்கு வஸ்திரதானம் செய்து புண்ணியம் சம்பாதிப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். எனினும் அந்த வஸ்திரங்களோ ஆளுக்கு ஒரு ஜோடி ; அதுவும் மாமாங்கத்துக்கு மாமாங்கம். சுருங்கச் சொன்னல் நகரத்தை நரகமாக்காமல் சுத்தம் செய்து அழகுபடுத்தும் அந்தத் தொழிலாளர்கள் மட்டும் நரகக் குழியிலேதான் வாழ்ந்து வந்தார்கள்: இந்த நிலைமைகளைச் சமாளிக்க முடியாதபோது தான், அந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமையின் பலத்தை, தமது உழைப்பின் சக்தியை உணர்ந்தார்கள் ; ஒன்றுபட்டு நின்று உரிமைக்காகப் போராடினர்கள். பஞ்சப்படி, சம்பள உயர்வு, புதிய உடை, வேலை நிரந்தரம், குடியிருப்பு வசதி, நீக்கப்பட்ட