பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12& இழி தொழில் தொழிலாளரை மீண்டும் வேலைக்கு எடுத்தல் முதலிய கோரிக் கைகளுக்காக, நகரசபை நிர்வாகிகளோடும் லேபர் அதிகாரி களோடும் வாய்சவிக்குமட்டும் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த் தார்கள். அவற்ருல் எந்தவித பயனும் விளையவில்லை. எனவே தான் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தங்களிடமுள்ள ஒரே ஆயுதத்தை, இறுதி ஆயுதத்தைப் பிரயோகிக்கத் துணிந்தார்கள். வேலே நிறுத்தம் ! கடந்த ஒருவார காலமாக, ஆண் பெண் உட்பட எல்லாத் தொழிலாளரும் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஒரு குஞ்சு குளுவான்கூட, வேலைக்குச் செல்லவில்லை, வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகுதான் நகரசபை நிர்வாகிகளுக்கும் அதன் பலம் பலன் எல்லாம் தெரிந்தன. நியதி தவருது சுற்றிச் சுற்றி வரும் பிரபஞ்ச கோளமே திடீரென்று ஸ்தம்பித்துச் சிந்திச் சிதறிப் போவதுபோல், நகரத்தின் நிலை நியதி குலைந்து தத்தளித்தது. எனினும் நிர்வாகிகள் தொழிலாளரின் கோரிக்கைக்கு இணங்க முன்வரவில்லை ; உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பலரும் வேலை நிறுத்தத்தை உடைக்கச் செய்த சதிவேலைகள் எதுவும் பலிக்க வில்லை. சுதந்திரத்தின் பாதுகாவலர்களான அந்தப் பிரமுகர் கள் போலீஸின் மறைமுகமான ஒத்துழைப்பைச் சம்பாதித்துக் கொண்டு தமது அடியாட்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு, நகரசுத்தித் தொழிலாளரைக் கண்ட கண்ட இடத்தில் தாக்கி ஞர்கள் : குடியிருப்புக்குள் நுழைந்து சட்டிபெட்டிகளை உடைத் தெறிந்தார்கள்; பெண்களையும் பிள்ளைகளையும் சீரழித்தார்கள். போலீசாரும் அமைதியை நிலைநாட்டும் கடமை யுணர்ச்சி யோடு தொழிலாளர்மீது கண்டும் காணுமலும் தடியடித் தாக்குதல் நடத்தினர் ; அமைதிக்குப் பங்கம் விளைவித்த தொழிலாளரை லாக்கப்பில் தள்ளிஞர்கள். - - அடக்குமுறை-சூழ்ச்சி-அரசியல் சாகசம் எதுவும் அந்தத் தொழிலாளரை அடக்கிவிடவில்லை. அவர்கள் எதற்கும் அஞ்ச வில்லை : அடிபணியவில்லை. உலைக்களத்திலே தள்ளிய காலத்தி லும் அவர்கள் உறுதி குல்ேயவில்லை. அதற்குப் பதிலாக அவர் கள் உருக்காகிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்ல. அந்தத் தொழிலாளரின் உரிமைப் போராட்டம் பிற பகுதித் தொழிலாளர்களின் கவனத்தையும் கவர்ந்தது. நகரசுத்தித் தொழிலாளருக்கு ஆதரவாக பிறதொழிலாளர்கள் கூட்டங்கள் நடத்தினர் : ஊர்வலம் நடத்தினர் : கோஷமிட்டனர் : தீர்மா னங்கள் நிறைவேற்றினர் : ஆதரவு திரட்டினர்...... இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த வேலை நிறுத்தப் போராட் டத்தைச் சீர்குலைத்துச் சின்னபின்னமாக்கக் கனவு கானும் புனித போராட்ட”த் திட்டம் நகரக் காங்கிரஸ் கமிட்டி