பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இழி தொழில் முடியாது என் சவத்தின்மீது நடந்துபோங்கள் !' என்று முன்னே வந்து முழக்கினன் ஒரு வயோதிகத் தொழிலாளி. அந்தக் கிழட்டு உடம்பு படபடத்தது : நரம்புகள் புடைத்துத் துடித்தன. சேர்மன் பிள்ளையவர்கள் போலீஸ் உதவியை அழைப்பதா வேண்டாமா என்று யோசித்தார் ; அவருக்குப் பின்னல் திரண்டு நின்ற ஊழியர்கள் எதிரே ஏறிட்டுப் பார்த்தார்கள். எதிரே...... தாடி மண்டி வளர்ந்த முகங்கள்-பசியும் -களைப்பும் பதிந்து, களையும் ஒளியும் இழந்து பஞ்சடைந்து தோன்றும் கண்கள்-ஒட்டி உலர்ந்து உட்குழிந்த வயிறுகள்-குழலாடித் தளர்ந்துபோன வயோதிகர்கள்-வாலிப வயதிலேயே வயோதிகத்தை அனுப விக்கும் குமரர்கள்-மானத்தை மறைக்கக்கூடப் போதுமான கந்தலற்றுத் தவிக்கின்ற பெண்கள்-பிஞ்சிலே வெம்பிய பழம் போன்று வற்றி மெலிந்து தோன்றும் சிறுவர் சிறுமிகள் ......... அவர்கள் அத்தனை பேரும் ஆண் பெண் என்ற வித்தியாச மின்றி, சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி, ஒரே விதமான உறுதியோடும் உத்வேக உணர்ச்சியோடும் நின்று கொண்டிருந் தனர். முன் வரிசையில் நின்ற காங்கிரஸ் ஊழியன் ஒருவன் அந்தக் கிழவனே நோக்கிக் கேட்டான்: ' எங்களை ஏன் வழி மறிக்கிருய்? உங்கள் வேலை நிறுத்தத்தால் ஊரே நாற்றமெடுத்துப் போச்சே ! ஏன் இந்த அடாத காரியம் செய்கிறீர்கள் ?” அந்தக் கிழவனிடமிருந்து கணிரென்று பதில் வந்தது: அடாத காரியமா ? எதய்யா அடாத காரியம் ? அந்தக் காந்தி மகாத்துமா சொல்லிக்கொடுத்த சத்தியாகிரகத்தைத் தானே நாங்களும் செய்கிருேம் !' - நாங்கள் செய்த சத்யாகிரகம் அன்னியனின் அநீதியை, ஆட்சியை எதிர்த்து நீங்கள் செய்வது சத்தியாகிரகமல்ல; சண்டித்தனம் !’’ ஏனையா ? நீங்க செய்தா சத்யாக்கிரகம், நாங்க செய்தா சண்டித்தனம் ! அப்படித்தாளுய்யா? நாங்களும் எங்களுக்குச் செய்த அநியாயத்தை எதுத்துத்தான் போராடுதோம், தெரிஞ்சிதா ?”