பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பர ரகுநாதன் 1 31 " உன்னிடம் வாதாட வரவில்லை. சரி வழியை விடு ' இருங்க, சாமி காந்தி மகான் உங்களை இப்படித்தான் சேவை செய்யச் சொன்னரோ ?' என்று எரிச்சலோடும் கும்பிக் கொதிப்போடும் கேட்டான். 'ஆமா, நகரத்தைச் சுத்தி செய்வது அவர் இட்ட கட்டளே!’ அந்தக் கிழவனுக்கு மீசை துடித்தது ; உதடுகள் நடுங்கின ! தொள தொளத்த தசைநார்களெல்லாம் முறுக்கேறித் திமிறுவது போல் இருந்தன. புடைத்துத் தெரியும் ரத்த நாளங்களும், நரம்புக் கொடிகளும் நெளிந்து புரண்டன...... இதோ பாருங்கையா! எங்க கூட்டத்தை உழைக்கிற உழைப்புக்குக் கிடைக்கிற காசு ஒரு வாய் சோத்துக்குப் பத்தலெ. எலும்பும் தோலுமா நிக்கிற எங்க குழந்தை குட்டிகளைப் பாருங்க; கட்டையிலே போற வயசிலேகூட வயித்தாத்திரம் தாங்க முடியாமெ, உழைச்சி உழைச்சித் தேஞ்ச இந்த உடம்பைப் பாருங்க. எங்க இத்தனை பேர் வயித்திலேயும் மண்ணடிச்சிட்டுத் தான் காந்தி மகான் ஊரைச் சுத்தம் பண்ணச் சொன்னரா ? எங்களுக்கு எதிரா, கருங்காலி வேலை பார்க்கிறதுக்குத்தான் காந்தி சொல்லிக் கொடுத்தாரா ? நெஞ்சிலே கையை வைத்து நிசத்தை சொல்லுங்கய்யா ’’! கிழவனின் குரல் உணர்ச்சிப் பெருக்கால் உச்சஸ்தாயிக்கு ஏறிக் குழ குழத்துத் தடுமாறியது. இவனேட என்னப்பா பேச்சு ?’ என்று வெட்டி முறித்துப் பேசிவிட்டு, அருகே நின்ற போலீஸ் ஜவான்களைக் கண் காட்டிய வாறு, 'ஊம்' என்று பத்திரம் காட்டி உறுமிஞர் திருவாளர் தில்லைத் தாண்டவராயர். மறுகணமே போலீஸ்காரர்கள் தொழிலாளர் அணிவகுப்பின் மீது தங்கள் கை வரிசையைக் காட்டத் தொடங்கினர். திடீரென்று அந்தக் கூட்டத்திலிருந்து கூச்சலும், வசவுகளும், கூக்குரலும் கேட்கத் தொடங்கின. அந்த அணிவகுப்பின் முன் வரிசையில் நின்ற அந்தக் கிழவன் மூக்கிலிருந்து வழியும் ரத்தத் தோடு ஐயோ!' என்று கூவிக்கொண்டு, பாதையிலே குறுக்கே பேச்சு மூச்சற்று விழுந்தான். பெண்களும் குழந்தைகளும் அடிகளைத் தாங்கமாட்டாமல் அலறிக்கொண்டு ஓடினர்கள் ; மண்டையிலிருந்து தெறித்துப் பாயும் ரத்தத்தோடு பல தொழி லாளர்கள் அடிகளைத் தாங்கிக்கொண்டு கீழே விழுந்தார்கள் ; அந்தத் தொழிலாளர்கள் ஏந்தி வந்த தொழிற்சங்கப் பதாகை முறிந்து கீழே விழுந்தது. காயம்பட்டுக் கிடந்த அந்தக் கிழவ