பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இழி தொழில் னின் கடைவாயிலிருந்து ஒழுகிய செங்குருதி அந்தப் பதாகையை நனைத்து நனைத்து அதை மேலும் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. சில நிமிஷ நேரத்துக்குள் போலீஸார் அங்கு அமைதியை நிலை நாட்டினர்கள் ! தாக்குதலை நடத்தி முடித்த போலீஸார் சேர்மன் பிள்ளைவாளைப் பார்த்துப் புன்னகை செய்தார்கள் ; சேர்மன் பிள்ளைவாளும் வெற்றிக் களிப்புத் துள்ளாடும் திருமுக விலாசத்தோடு குறுநகை பூத்தார். அவர்களுக்கு முன்னல் அந்தப் போர்க்கள அலங்கோலம் செக்கச் சிவந்து தோன்றியது. சேர்மன் பிள்ளைவாள் திருவாளர் தில்லைத் தாண்டவராயர் கம்பீரமான குரலில் தம் சகாக்களை நோக்கி ஆணையிட்டார். ம் ; செல்லுங்கள் முன்னே !’ திடீரென்று எழுந்த அந்த ஆணைச் சொல் அங்கு நிலவிய அந்தச் சுடுகாட்டு அமைதியைப் பிளந்து கொண்டு எதிரொலித் தது. அந்த எதிரொலியில் தாக்குண்ட முன்னணியில் நின்ற அந்த ஊழியன் தனது வலது காலைத் தன்னையுமறியாமல் விறுட் டென்று எட்டு எடுத்து முன் வைத்தான். ஆனல் அந்தக் காலைப் பதித்ததுமே ஏற்பட்ட உணர்ச்சி, அவன் உடம்பில் மின்சாரத் தாக்குதலின் அக்கினி வேகத்தைப் போல் அந்தக் காலை உதறி யெறிந்தது. அவனது காலில் நழுக்கென்று மிதிபட்டு வழுக்கி யது அந்தக் கிழவனின் உயிரற்ற சடலம் ! அதைக் கண்டதுமே அவன் கண்களும் மனமும் சுளுக்கிச் சுண்டுவது போலிருந்தன. என் சவத்தின் மீது நடந்து போங் கள் ! என்ற அந்தக் கிழவனின் வார்த்தைகள் கணிரென்று ஒலிப்பது போலிருந்தன. அவன் கால்கள் இடம் பெயர மறுத்தன. என்ன தயக்கம்? போங்கள் முன்னே ’ என்று திருவாள ரின் ஆணை முழக்கம் மீண்டும் ஒலித்தது. . முடியாது ! ) என்று அந்த ஊழியனிடமிருந்து கணி ரென்று எதிரொலி கிளம்பியது. முடியாதா? ஏன் முடியாது ?" என்று உறுமினர் சேர்மன் - "இந்த இழிந்த தொழில் என்னல் செய்ய முடியாது. எது இழிந்த தொழில் எந்தத் தொழிலும் இழிவான தில்லை என்று காந்தியடிகள் சொல்லவில்லையா ? அதற்குள்ளா கவா மறந்துவிட்டீர்கள்?’’