பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. எஸ். சுப்பையா 15 மதுவிலக்கு திாமிரபரணி தன் தடக்கைகளை எட்டிய மட்டும் தொட் டுச் செழிப்பித்த தீரத்தில் உள்ளது மாவடி கிராமம். ஏறக் குறைய நூறு தலைக்கட்டுகள் கொண்டது. அந்த வட்டாரத்தி லுள்ள கிராமங்களில் எல்லாம் மாவடி கிராமத்தார் தான் வறுமை இன்னதென்றே அறியாமல் வாழ்ந்தனர். ஆற்றுப்பாய்ச்சலில் அறுவடை நடக்கும் போது, ஏரிப் பாய்ச்சலில் நடுகை மும்முரமாக இருக்கும். நதி தீர நஞ்சை களில் புழுதி உழவு நடந்துகொண்டிருந்தால் ஏரி கழனிகளில் களைபறியில் பெண்கள் ஈடுபட்டிருப்பார்கள். ஆக, ஆண்டு முழுவதிலுமே மாவடிவாசிகளுக்கு உழைப்பு இருந்துகொண்டே இருக்கும். களைபறி முடிந்து சூல்கொண்ட நெற்பயிர் இப்போதோ சற்று நேரத்திலோ கதிர்களை ஈன்று விடுவேன் என்று விம்மிக் கொண்டிருக்கும் சமயத்தில் கண்ணுக்கு எட்டியதுாரம் கழனிக் காட்டைப் பார்த்தாலோ அப்பப்பா அந்தக் காட்சியே ஒரு தனி. இந்தக் காட்சியை எல்லாம் நன்ருய் அனுபவிக்க மாவடி கிராமத்திலுள்ள ஜில்லா போர்டு பள்ளிக் கூடத்துக்கு ஆசிரிய ராக வந்து சேர்ந்தான் இளைஞன் நாகய்யா. பழைய ஆசிரியர் வயதானவர், தலை வழுக்கை விழுந்து நடக்கும்போதே கொஞ்சம் தள்ளாடுவார். கையில் ஒரு கம் பும் முட்டை வடிவ மூக்குக் கண்ணுடியும் அவருடைய முத்தி ரைகள், பத்து ஆண்டுகளாக அந்த ஊரிலேயே பணி செய் தவா.