பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. எஸ். சுப்பையா 135 ஆனல் ஊரார் சிலர் அவருடைய மாற்றலைத் தடுத்து மறு உத்தரவு வாங்க முயன்ருர்கள். அவருக்கும் அந்த ஊரை விட்டுப் போக மனம் இல்லை. அதனல் நெருங்கிப் பழகிய அந்தரங்க நண்பர்களைக்கொண்டு உத்திரவை ரத்து செய்து இன்னும் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ அங்கேயே பணி செய்து ஒய்வு பெற விரும்பினர். நாகய்யாவுக்கு ஆசிரியர் பயிற்சி முடிந்து இது முதல் நியமனம். இளைஞன், கல்யாணமாகாதவன். இந்தக் காரணத்தையும் சுட்டிக்காட்டி அவன் அங்கே வேண்டாம் என்று மனுவில் குறிப்பிட்டு பெரும்பான்மையோர் கையெழுத்தும் கைநாட்டும் வாங்கப்பட்டன. பழைய ஆசிரியர் புது ஆசிரியருக்கு வேலையை ஒப்புக் கொடுக்க மறுத்துவிட்டார். ஊரார் ஜில்லா போர்டு தலைவ ருக்கு அனுப்பிய மனுவுக்கு உத்தரவு வரும் வரை வேலையை அவனிடம் ஒப்படைக்க முடியாதென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். உத்தரவும் வந்தபாடில்லை. நாகய்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேறு எந்த ஊருக்காவது மறுநியமனம் வந்தாலாவது போதும். வேண்டாத ஊரில் வலுக்கட்டாயமாக இருந்து பணி செய்வ தில் மனக்கஷ்டமே தவிர வேறு என்ன லாபம்? இந்த நிலையில் ஊரார், கள்ளுக்கடை கண்ணுசாமியை அணுகி அவன் ஜில்லா போர்டு தலைவரை நேரில் கண்டு உத்தரவை ரத்து செய்து வாங்கிவரும்படிக் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க, கண்ணுசாமியும் அதிகாலையில் போகும் ரயிலில் போய்விட்டான். இரண்டு மூன்று நாட்கள் ஆலுைம் அங்கேயே தங்கி உத்திரவை கையோடு வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அவன் போனதாக கமுக்கமாய்ப் பேசிக்கொண்டார்கள்: நாகய்யா அன்று மாலை ரயிலில் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுப் போகத் தீர்மானித்துவிட்டான். முதல் நியமனம் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை அவன் முகத்தில் நன்ருகத் தெரிந்தது. வந்த இந்த ஒரு வாரத்துக்குள்ளேயே மாவடி கிராமத்து இளைஞர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். - எழுத்து வாசனை இதுவரை பெருதவர்கள் அவனிடம் இரவில் கற்றுக்கொள்ள விரும்பினர்கள்.