பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 36 மது விலக்கு நாகய்யாவின் மனதில் என்ன என்னவோ திட்டம் உருவாகி யிருந்தது படிப்பைப்பற்றி. எல்லோரும் படிக்கவேண்டும். எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். பெண்களும் படிக்க வேண்டும். ஒரு பெண் தன் கணவனுக்குக் கடிதம் எழுதும் அளவுக்காவது எழுதத்தெரிந்திருக்க வேண்டும். அதற்காக அவள் இன்னொருவர் துணையை நாடக்கூடாது என்றெல்லாம் திட்டம் வைத்திருந்த அவனுக்கு மாவடி கிராமத்தில் தொடக்க காலத் திலேயே ஏற்பட்ட எதிர்ப்பு பெரு வெறுப்பையும் சோர்வையும் விளைவித்தது. கடைசியாக அதைவிட்டுப் போய் ஜில்லாபோர்டில் மறு நியமனம் பெறவேண்டியதுதான் என்று முடிவுகட்டி தன் கொஞ்ச நஞ்ச சாமான்களோடு ரயில் நிலையத்தை அடைந்தான். அவன் போகும்போது ஆண்களும் பெண்களும் அவரவர் வீட்டி லிருந்து எட்டிப்பார்த்தார்கள். பழைய ஆசிரியருக்கு வெற்றி. அந்த வெற்றிக்குப் பாடுபட்டவர்கள் பெருமிதம் அடைந்தார் கள். அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனல் ரயிலடியில் அவன் போகும் வண்டி வருவதற்குள் இளைஞர்கள் கூட்டமாகச் சென்று அவன் போகக்கூடாது என்று தடுத்தார்கள். - மேலாவிலிருந்து உத்தரவு என்னதான் வருகிறது என்று பார்ப்போமே ! அதுவரை எங்களுக்காகத் தங்குங்கள். அப்புறம் நடக்கிறபடி நடக்கட்டும் ' என்று வாதாடினர்கள். அவர்கள் அன்பைப் புறக்கணிக்க விரும்பவில்லை நாகய்யா. "கள்ளுக்கடை கண்ணுசாமி செல்வாக்கு உள்ளவன் என் கிருர்களே ! உத்திரவை ரத்து செய்து வாங்காமலா வருவான்?’’ என்று ஐயம் தெரிவித்தான் நாகய்யா. 'அப்படி உத்தரவு வாங்கிவந்து விட்டால் நாங்களே உங் களை வழியனுப்பி வைக்கிருேம் ' என்று சொல்லி ரயில் நிலையத் திலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். எதிர்பார்த்ததற்குமாருக, கண்ணுசாமியின் பாச்சா ஜில்லா போர்டு தலைவரிடம் பலிக்கவில்லை. போனமச்சான் திரும்பி வந்த கதையாகத் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வெறுங்கையோடு மாவடி வந்தான். நாகய்யா ஆசிரியர் பதவியை ஒப்புக்கொண்டதோடு மாற்றலாகிச் செல்லும் பழைய ஆசிரியருக்குத் தக்கபடி ஒரு பிரிவு உபசாரம் வேறு நடத்திக் காண்பித்தான். பழைய