பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. எஸ். சுப்பையா I 37 ஆசிரியரின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக இந்த உபசா ரத்தை ஆதரித்ததாகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரே வேக்காடு. கண்ணுசாமி உள்ளுக்குள் கருவினன். இரு, இரு. உன்னை என்ன செய்கிறேன் பார் ' என்று வன்மம் வைத்தான். நாகய்யா மீது என்ன பழியைச் சுமத்தி ஊரைவிட்டு விரட்டலாம் என்று இராப் பகலாய் யோசனை செய்ய ஆரம்பித்தான். 2 யார் இந்த கண்ணுசாமி கண்ணுசாமி குடும்பமே பரம் பரையாக கள்ளுக்கடை குத்தகை எடுக்கிறவர்கள். கண்ணுசாமி அக்கரை சீமையிலிருந்து அண்மையில்தான் ஊருக்கு வந்தவன். மலேயாவிலோ சிங்கப்பூரிலோ ஒரு சாராயக்கடையை நடத்து கிறதாம் அவன் குடும்பம். குடும்பத்தில் ஒருவர் மாறி மாறி அங்கேபோய் அதை மேற்பார்வை பார்ப்பார்கள். ஊரில் நிலபுலன்கள், பனந்தோப்பு, தென்னந்தோப்பு சேர்க்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது. கண்ணுசாமிக்கு நாற்பது வயதிருக்கும். சமீபத்தில் அவ னில் ஏற்பட்ட மாற்றம் இரண்டு தங்கப் பல் கட்டிக்கொண்டு வந்திருப்பதுதான். அவன் சிரிக்கும்போது மற்றவர்களும் சிரிப் பார்கள்-ஏகத்தாளமாக அந்தப் பல்லைப் பார்த்து. கண்ணுசாமி வருவதற்குமுன் அவன் வரவுக்குக் கட்டியம் கூறுவது கள் வாசனை அல்ல; அவன் சிங்கபூரிலிருந்து கொண்டுவந்திருக்கும் ஒருவித வாசனை. அது சீமைச்சாராய வாசனைதான் என்று சிலர் மறை வாக தங்களுக்குள் எள்ளி நகையாடுவது வழக்கம். மதுவிலக்கு, மாவடியிலும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களி லும் வெகுகாலமாக தலைகாட்டவில்லை. சில இளைஞர்கள் மட்டும் அவ்வப்போது நகர்ப்புறங்களில் கேட்ட கொள்கைகளைப் பின் பற்றி மதுவிலக்கு பிரசாரம் செய்யத் தொடங்குவார்கள். ஆனல் கள்ளுக்கடை கண்ணுசாமி இரவோடு இரவாய் எல்லா பெரியதனக்காரர்களையும் அழைத்து அழகாக ஒரு கள் பார்ட்டி நடத்திக் காண்பித்துவிட்டாளுளுல் - அவ்வளவுதான் - படம் ஒடுங்கிய பாம்புபோல அந்தப் பிரச்னை படுத்துவிடும். ஆயினும் கள்ளை ஒழித்தே ஆகவேண்டும் என்ற உணர்ச்சி அந்த வட்டாரத்தில் மறைந்து போய்விடவில்லை. அதுவும் சங்கிலியோடு வளர்ந்து வந்தது என்றுகூடச் சொல்லலாம். சங்கிலி இதற்காகத்தானே என்னவோ புழுதியில் நட்ட சம்பா நடுகையைப்போலச் செழிப்பாக வளர்ந்துவிட்டாள்.