பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மது விலக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னல் சிற்ருடையைக்கூட நன்ருகச் சுற்றிக்கொள்ளத் தெரியாத சங்கிலி, இப்போது நம்பமுடியாத படி பச்சை மஞ்சளை முறித்ததைப்போல கண்ணேப்பறிக்கும் பொலிவோடு விளங்கிள்ை. பல தடவைகளில் வாய்க்கால் கரைகளிலும் வயல் வரப்புகளி லும் சங்கிலியை அவன், எதிரேவரக் கண்டிருக்கிருன். அவன் தான் புதிதாக வந்த ஆசிரியர் என்று அறிந்தபொழுது, சங்கிலி யும் கண்களை அகல விழித்து, தன் நெஞ்சகத்துப் புகவும் வழி விட்டாள். - இதற்குமுன்னில்லாத புத்தம்புது உணர்ச்சிகள் சங்கிலியிடம் தோன்றி வலுக்க ஆரம்பித்தன. நாகய்யாவின் அழகிய முகம், கூரிய விழிகள், தூய ஆடம்பரமற்ற தன்மை, இனிய மொழி கள் எல்லாம் அவளுடைய இதயத்தில் சதா உலவி அவனைப் பற்றி இடையருமல் நினைக்கத் தூண்டின. அறுவடை சமயத்திலும், அறுவடை முடிந்தவுடனுந்தான் கள்குடி அபரிமிதமாக இருக்கும். களங்களிலும் களத்துமேடு களிலும் கள், மிடாக்களிலும் குடங்களிலும் குடுவைகளிலும் வந்து இறங்கிய வண்ணமாக இருக்கும். ஆண்களும் பெண்களும், ஒலைப்பட்டைகளிலும், கலயங்களிலும், கள்ளை ஊற்றி ஊற்றிக் குடித்து மயங்குவார்கள். காசை வாங்கிக்கொண்டு கள் விற்பதைவிட, நெல்லுக்குக் கள்ளைப் பண்டமாற்று செய்வதில்தான் அதிக லாபம் என்பது கண்ணுசாமி கண்டு வைத்திருந்த சிதம்பர ரகசியம். அதனல் தான் வயல்களிலும் களத்துமேடுகளிலும் கள்ளை ஆருகப் பாய விட்டு வயல் நெல் வீடுவந்து சேர்வதற்குள்ளேயே அவன் நெல்லை அபகரித்துச் செல்லும் கொடுமையை மாவடி இளைஞர்கள் கண்டிக்கத் தலைப்பட்டார்கள். முதல்நாள் இரவில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தலைமையில் ரகசியக்கூட்டம் நடத்திக் கள்ளை அடியோடு ஒழிக்க ஆலோசனை செய்தார்கள். அதில் முக்கியமான யோசனை கள்குடியின் தீமை யைப்பற்றி முதலில் மக்கள் உணர்ந்து மனம் திருந்த வேண்டும். ஆகையால் ஊரில் பெரியவர்களை நேருக்கு நேர் சந்தித்து அதைப்பற்றி விளக்கவேண்டும். அடுத்து, கள் விற்பனை, கடை யோடு மட்டும் நிற்காமல் வயல்களிலும் களங்களிலும் விற்கப் படுவது உடனே நிறுத்தப்படவேண்டும். ஆலோசனைப்படி மறுநாள் இளைஞர்கள் வயல்களிலும் களங் களிலும் சுற்றித்திரிந்து, விற்பனை நிலவரத்தை அறிந்து வந்து மூன்ரும் நாள் இரவில் ஊர்க் கூட்டம் போட்டு அதைத்