பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மது விலக்கு மேடுகளில் சுற்றி வேவு பார்த்துவிட்டு வந்த இரு உற்சாகமான இளைஞர்கள் இந்தச் சங்கதியையும் கொண்டு வந்தார்கள். அதாவது, சங்கிலி வீட்டுக்குக் கள்ளுக்கடை கண்ணுசாமி குடுவை குடுவையாகக் கள் அனுப்புவதைப் பற்றி மாவடியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பலவித வதந்திகள் அறு வறுக்கத்தக்க விதமாக உலாவுவதைத்தான் அவர்கள் நாகய்யா விடம் சொன்னர்கள் . அந்தச் சங்கதி அவன் காதில் விழுந்தபோது தூண்டில் புழுவைப்போல் துடித்தான். சே! இப்படி ஒருநாளும் இருக்காது. ஒருவேளை உள் நோக்கத்தோடு கண்ணுசாமி இலவசமாகக்கள் அனுப்புவதில் வேணுமாளுல் ஒரு வேளை உண்மை இருக்கலாம். ஆளுல் அதற்காகச் சங்கிலி மீது இந்த அவதுாறு சுமத்துவது அபாண்டம். அடுக்காது. இரவு பகலாக ஒரு புழு இருந்து குடைவது போல நாகய்யா துடித்துக் கொண்டிருந்தான். ஒரு வாரம் கழிந்தது. தற்செயலாக சங்கிலியின் தமையன் முத்தனை வாய்க்கால் ஒரத்தில் சந்தித்தான். முத்தன் மிகவும் நல்லவன். நாகய்யாவிடம் தனி மதிப்பும் கொண்டவன். அவனிடம் நாகய்யா முதலில் பொதுவாகக் கிராமத்தைப் பற்றிப் பேசிவிட்டு பின்பு சாமர்த்தியமாக அந்த வதந்தியைப் பற்றி விசாரித்தான், பெண்கள் குடிப்பது வழக்கம் என்றும் அம்மாதிரியே சங்கிலி யும் குடிப்பது வழக்கம் என்றும் அதைத் தவிர மற்றபடி பேசுவது எல்லாம் வம்பு என்றும் சொன்னன். நாகய்யாவுக்கு மகிழ்ச்சியும், துக்கமும் கலந்த ஓர் உணர்ச்சி. அந்த வதந்தியில் உண்மை ஏதும் இல்லை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சங்கிலியும் குடிக்கிருள் என்பதில் ஒரே வருத்தம். போகட்டும், சங்கிலி சின்னவள் தானே? அவளாவது குடிக்காமல் இருக்கலாகாதா? ' என்று உருக்கமாக வேண்டிக் கொண்டான். மறுநாள் அதிகாலையில் நாகய்யாவின் வீட்டுக் கதவைத் தட்டினன் முத்தன். நாகய்யா வெளியே வந்தான். முத்தன் சொன்னன் : வாத்தியாரையா நீங்க சொன்னதை சங்கிலியிடம் சொன்னேன். அவ்வளவு தான். தங்கச்சி என்ன சொன்னுள் தெரியுமா? கள்ளைக் கையால் இனிமேல் தொடுவது கூட இல்லை என்று என் தலையில் அடித்துச் சத்தியம் செய்து விட்டாள். உங்கள் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே என்று சங்கிலி