பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. எஸ். சுப்பையா 141 ரொம்பச் சங்கடப்பட்டாள். அதைக் கேட்ட நாகய்யா அது நனவு தான என்று தன் காதுகளை நம்பமுடியாமல் திகைத்தான். நாகய்யா இவ்வளவு காலமும் தனிமையைத் துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான் அல்லவா ! இப்போது சங்கிலியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் வேரூன்றி விட்டது. இனி முத்தனிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டியது தான். ஒரு நாள் முத்தன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவனே அணுகித் தன் விருப்பத்தை மெதுவாக அவனிடம் வெளிட்டான். முத்தன் அங்கலாய்த்தான். 'தம்பி, இதை நீ முன்னமே சொல்லியிருக்கக்கூடாதா! சங்கிலிக்கு உனக்கு வாழ்க்கைப்படக் கொடுத்து வைத்திருந்தால் அது புண்ணியம் செஞ்சதாச்சே ! இந்தக் கள்ளுக்கடை கண்ணுசாமியினல் ஏற்பட்ட புரளியினலே அவளுக்குக் கருங்காட்டுக் கிராமத்தில் ஒருத்தனுக்கு கொடுக்க நிச்சயமாயிட்டதே ! ’’ நாகய்யாவுக்கு அவன் மனசைப் போலவே, அவன் கண்ணுக்குத் தோன்றிய பொருள்கள் யாவும் சுழன்றன: 3 சிங்கிலி மாவடியைவிட்டு கருங்காட்டுக் கிராமத்துக்குப் போன ஒரு வாரத்துக்குள், மாவடியும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து விட்டன: எப்படியோ நாகய்யா அந்த ஊரை விட்டுத் தன்னை மாற்றிக் கொண்டான். - நாகய்யா மாவடியை விட்டு நான்கு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்ட பின்னர், புளியங்குளம் என்ற ஊரிலுள்ள ஒரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு உதவி ஆசிரியராக அவன், நியமிக்கப் பட்டு மாற்றல் உத்தரவு வந்து சேர்ந்தது. புளியங்குளத்தில் நாகய்யாவுக்கு வசதியான வீடு எதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் புளியங்குளத்துக்கு அருகில் உள்ள கருங்காடு என்ற கிராமத்தில் வீடு கிடைக்கும் என்று தலைமை ஆசிரியர் சொன்னர். -- கருங்காடு என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே திடுக்கிட்டது நாகய்யாவின் மனம். அலை அலையாக எண்ணங் கள் வந்து மோதின. பேசாது கற்சிலை போல நின்ருன்.