பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மது விலக்கு இதற்குள் தலைமை ஆசிரியர் கருங்காட்டிலிருந்து அங்கு வேலை செய்ய வந்திருந்த ஒருவனிடம் நாகய்யாவை அறிமுகப் படுத்தி வைத்து, அவனுக்கு வசதியாகவுள்ள ஒரு சின்ன வீடு பார்த்துக்கொடுத்து உதவி செய்யும்படிச் சொன்னர், உற்சாகமாக அதை ஒப்புக்கொண்டான் அவன். தன்னிடமே ஒரு வீடு இருப்பதாகவும் அந்த ஆசிரியருக்குப் பிடித்திருந் தால் அதிலேயே தங்கலாம் என்றும் சொன்னன். எனவே, அவனுடைய சாமான்கள் கொண்ட மாட்டு வண்டி மீண்டும் பூட்டப்பட்டது. அப்போது பொழுது மறையும் வேளை தடத்தின் வழியாக வண்டி முன்செல்ல இருவரும் பின்னல் நடந்து சென்றனர். அந்த மனிதனிடம் அப்பொழுதே சங்கிலியைப்பற்றி விசா ரிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனை உந்தித்தள்ளியது. ஆல்ை அது அழகாக இருக்காது என்று படவே அதைப்பற்றி எதுவும் பேசாது அந்த எண்ணத்தை அடக்கிக்கொண்டான். சாலை ஓரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்னல் வண்டி நிறுத்தப்பட்டது. அவன் சாவி கொண்டு வந்து வீட்டு முன் வாசலைத் திறந்து அரிக்கேன் லாந்தல் ஒன்றை ஏற்றி வைத்துச் சாமான்களையும் வீட்டினுள் கொண்டு வந்து சேர்த்தான். அங்கு கிடந்த ஒரு கயிற்றுக்கட்டிலில் அவனுடைய படுக்கையை விரித்துப்போட்டான். அதில் உட்கார்ந்துகொண்டிருந்தான் நாகய்யா. இந்தா, இவனைப் பிடி, எவ்வளவு சேட்டை பண்ணுது வர வர ' என்று குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு, இவர்தான் புது வாத்தியார் அய்யாவா?’ என்று அன்புடன் தன் வரவேற்பைத் தெரிவித்தாள் அவன் மனைவி, தானும் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக. ' குழந்தைக்கு வயது என்ன?’ என்று கேட்டான் நாகய்யா. மூணு வயசு முடிஞ்சு போச்சு ’’ என்ருள் அவள். 溪盛 பேரு :د و ن பேரு, நாகய்யா.' நாகய்யா திடுக்கிட்டது அந்த தம்பதிக்குத் தெரியாது, நாகய்யாவா......? பலமான சிந்தனை ஒட்டம் அவன் இத யத்தில் ஒட ஆரம்பித்தது. வந்த களைப்பினல் படுத்துக்கொண்டான் நாகய்யா சுவர்க் கோழிகள் விடாமல் இய்ங்ங் ' என்று கத்திச் செவியைப் பிய்த்துக்கொண்டிருந்தன.