பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. எஸ். சுப்பையா 143 சற்றுநேரம் கழிந்ததும் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. நாகய்யா எழுந்தான். அவன் கண்களை நம்பமுடியவில்லை; சங்கிலி : ஆமாம், சங்கிலியேதான் !! மீண்டும் கதவைச் சாத்திவிட்டு அவன் அருகில் வந்தாள் சங்கிலி, அவள் கண்களில் கண்ணிர் வெள்ளம் புரண்டோடியதுடு நாகய்யா என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிக்கொண் டிருந்தான். ' உங்களுக்காக நான் எவ்வளவு நாள் காத்துக்கொண் டிருக்கிறேன்? என்னை நீங்கள் மறந்துவிட்டீர்களா ? என்னல் ஒரு நிமிஷம் கூட உங்களை மறக்க முடியவில்லையே. என் மனம் உங்களையேதான் சுற்றிக்கொண்டிருக்கிறது, மலரைச்சுற்றி சதா வட்டமிடும் வண்டைப்போல...... ’’ என்று கூறியவண்ணம் அவனை நெருங்கிக் கட்டிலின் மீது அமர்ந்தாள். சங்கிலி இவ்வளவு அழகாகப் பேச எங்கு கற்றுக்கொண்டாள்? சாதாரண கிராமப் பெண். மாவடி கிராமத்தை விட்டுக்கூட நகர்ப்புறங்களுக்கு அவள் அதிகம் போனது இல்லை. தன்னிடம் இவ்வளவு தூரம் அவள் அன்புகொண்டிருந்தது தனக்குத் தெரியாமல் போயிற்றே. அவளுக்காக யாராவது காத்துக் கொண்டிருந்தார் என்ருல் அது தான் அல்லவா ? அவளை அல் லவா தான் மறந்துவிட முடியவில்லை. அவளை அல்லவா தன் மனம் சதா சுற்றிக்கொண்டிருக்கிறது... இவ்வாறு நினைத்த நாகய்யா வெள்ளம் எனப்பாயும் அவள் கண்ணிரைத் துடைக்க எண்ணிக் கட்டிலில் படுத்துக் கிடந்த அவன் எழுந்து அவளை நெருங்கி அமர்ந்தபொழுது கதவு மீண்டும் கீச்சிட்டுக்கொண்டு திறந்தது ! நாகய்யா திடுக்கிட்டுக் கண்விழித்தான். சங்கிவி ? சங்கிலி எங்கே? என்ன பயங்கர இன்பக்கனவு ! அவன் உணவோடு உள்ளே வந்து அவனைச் சாப்பிட வேண்டி ஞன். அவன் மனைவி பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போய்விட்டாள். அந்த மனிதனிடம் நாகய்யா, ஆமாம்... மாவடி கிராமத்தி லிருந்து ஒரு பெண் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருக் கிருளே சங்கிலி என்று பேர். அவள் வீடு எங்கே? அவள் சவுக்கியமா ? நான் நாலு வருஷங்களுக்கு முன்னல் மாவடி பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தேன். அவர்கள் குடும் பத்தை எனக்கு நன்ருகத் தெரியும் ' என்ருன்.