பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மதுவிலக்கு அவன் முகம் திடீரென்று மாறுதல் அடைந்தது. விம்மலும் பொருமலும் அவன் தொண்டையை நெரித்தது. இந்தப் பாவிக்குத்தான் தங்கம்போல அந்தப் பெண்ணைக் கொடுத்தார் கள். ஒரு வருஷத்துக்குள் இந்தப் பிள்ளையைப் பெத்துவிட்டுப் பாயும் படுக்கையும் ஆளுள். அவள் மனசில் என்ன கவலையோ தெரியாது. நீங்க உக்காந்திருக்கும் கட்டிலில்தான் ஆறு மாதம் கிடந்தாள். பண்ணுத வைத்தியம் இல்லை. எண்ணுத தெய்வம் இல்லை. கடைசியில் என்னே விட்டுவிட்டுப் போய்விட்டாள்.' நாகய்யாவின் மனமும் தலையும் பம்பரம்போல் சுற்றியது. மேலும் சங்கிலியின் கணவன் சொன்னது அவன் காதில் விழ வில்லை.